உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 22.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நூல்கள்

மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் -1

209

கணநாதரை நந்தி' என்னும் பெயராற் கூறாமை யென்னையெனிற், கணங்களுள் நாதராய்ச் சிறந்தோர் சிலர்க்கு ‘நந்தி’ எனும் பெயருண்மை திருமந்திரத்தால் அறியப்படுதலின், 'கணநாதர்’ எனினும் ‘நந்தி’ எனினும் ஒன்றேயாம். அவ்வாறாயின், ஒரு புராணமாயினும், அவரை ‘நந்தி’ என்று கிளந்து கூறிய தில்லையாலெனின்; புராணங்கள் எழுதினோர் மிகுந்த ஆராய்ச்சி யுடையவர் அல்லர்; முன்னுள்ள ஒரு புராணம் ஒன்றைச் சொன்னால் பின்வருவோர் அதனை ஆராய்ந்து பாராமல் அதனை அங்ஙனே சொல்லிவிடுவர். இறைவன் செம்படவர் உருவிற் சென்று பிடித்தது கெளிற்றுமீன் என்பது புலப்படத் திருவாதவூரடிகள்.

“கேவேடர் ஆகிக் கெளிறது படுத்து

மாவேட் டாகிய ஆகமம் வாங்கியும்”

ஆதலால்,

66

இப்

.

என்று கூறா நிற்க. நம்பியார் தமது திருவிளையாடலில் அதனைச் சுறவுமீன் எனக் கூறுவர் (28,8) பரஞ்சோதி முனிவரும் அதனை அங்ஙனமே சுறவென ஆராய்ந்து பாராமற் கூறுவர் (57, 9). இவ்வாறு புராணவுரைகள் ஆய்ந்து பாராமல் கூறப் படுவனவும், ஒன்றோடொன்று முரணாகக் கூறப்படுவனவும் பலப்பல; அவை தம்முட் சில மாணிக்கவாசகர் வரலாற்றில் ஆண்டாண்டு காட்டியிருக்கின்றேம். புராணங்கட்கு முற்பட்டிருந்த திருநாவுக்கரசுகள் குடமுழநந்தீசன்” எனக் கூறியது பிற்பட்ட இப் புராணங்களிற் புகன்றபடி இல்லாமை கண்டு அதற்கு வேறுபொருள் பண்ணுவேமெனப் புகுதல் பெரிதும் பிழைபாடுடைத்தாம். தாம் முன்னே சிவபிரான் பக்கல் அணுக்கராய் நின்ற வுண்மையினை; "நீக்கி முன்எனைத் தன்னொடு நிலாவகை குரம்பையிற் புகப்பெய்து” என்று அடிகள் தாமே கூறுமாற்றானும், பிற்போந்த அப் புராணவுரைகளும் அவரை அங்ஙனம் நின்ற ஒரு ‘கணநாதர்’ எனவே ஒருப்பட்டுக் கூறுதலானும், அங்ஙனம் இறைவன்பால் அணுக்கராய் நிற்றற்குரியார் ‘நந்திகள்’ எனப் பெயர்பெற்ற ஒருவரன்றிப் பலர் உண்மையானும், அவருள் ஒருவரே மாணிக்க வாசகராய்ப் பிறந்தனரென்பார்,“குடமுழ நந்தீசனை வாசகனாக் கொண்டார்” என்று அரசுகள் அருளிச்செய்தனர். குடமுழா இயக்கும் நந்தி ஒருவரே உளர் என்பதற்கு எதிர்ப்பக்கத்தவர் மேற்கோள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_22.pdf/242&oldid=1587689" இலிருந்து மீள்விக்கப்பட்டது