உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 22.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

210

மறைமலையம் 22

காட்டாது இயைபில்லாதவற்றைப் புராணங்களினின்றும் விரித்தது பொருத்தமின்றாம். முன்னாசிரியரான மாணிக்க வாசகர் திருநாவுக்கரையர் முதலானோர் அருளிச்செய்த திருமொழிகட் கேற்பப் பின்வந்த புராணக்காரர் கூற்றுகட்கு உரைசெய்ய வேண்டுமே யல்லாமல், இப் பின்னோர் கூற்றுகட்கேற்ப முன்னோர் மொழிகளைத் திரித்துப் பொருள்செய்தல் ஆகாதென்க.

இனி, மேற்போந்த அப்பரது திருத்தாண்டகத்தில் 'மாணிக்கவாசகன்' என்று சொல்லப்படாமல் 'வாசகன்' என்று மட்டுஞ் சொல்லப்பட்டிருத்தலால், அஃது அவரைச் சுட்டுமாறு யாங்ஙனமெனின்;- “மரையிதழ் புரையும் அஞ்செஞ் சீறடி என்னுஞ் சொற்றொடரின் 'மரை” என்ற சொற்குப் பொருள் யாதென ஆராயுமிடத்துப், பின்வரும் இதழையும், அவ்விதழை யொக்கும் மகளிரின் மெல்லிய சிற்றடியையும் நோக்கி, அது 'தாமரை' என்னுஞ் சொல்லின் முதற்குறையாய்த் தாமரை மலரை யுணர்த்துமே யல்லாமல், மானை யுணர்த்தாதென்று துணிகின்றாம். இதுபோல், நந்தியே வந்து பிறத்தற்குரிய வாசகன்

யாவன் என்று ஆராய்ந்து பார்க்குமிடத்தும், மாணிக்கவாசகர் தமது பிறப்பைப் பற்றித் தாமே யருளிய குறிப்பானும் சிவகணத்தார் ஒருவரே அவ்வாறு மாணிக்க வாசகராய் வந்தனரெனப் வ

புராணங்கள் நுவலுமாற்றானும், சிவகணங்கட்குத் தலைவராய் நிற்கும் நாதர்கள் நந்திகள் எனப் பெயர் பெறுதலை பெறுதலை மேலே காட்டியவாற்றானும் 'மாணிக்க வாசகன்' என்னுஞ் சொல்லே முதற் குறைந்து ‘வாசகன்' என நின்றதென்பது முடிக்கப்படும் என்னை? ஒரு சொல்லுக்குப் பொருள்செய்யுங் கால், முன்பின் உள்ள சொற்களோடு அஃது இயைந்து பொருள் தரும் வகையினையும், அச்சொல்வழங்கிய காலத்து அதற்குள்ள பொருள்களில் எப்பொருள் ஆண்டைக்குப் பொருந்துகின்ற தென்பதனையும் நன்கு ஆராய்ந்து பார்த்து, அதன்மேலும் ஆக்கியோன் கருத்தையும் ஒட்டி அதற்குப் பொருள் துணிதலே தொல்லாசிரியரும் பிறருங் கைக்கொண்ட முறையாகலின்

என்க.

அற்றன்று, 'வாசக': என்னுஞ்சொல் வடமொழியாக லானும், அதற்குத் 'தூதுவன்' என்னும் பொருளும் உண்மை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_22.pdf/243&oldid=1587690" இலிருந்து மீள்விக்கப்பட்டது