உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 22.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

212

மறைமலையம் 22

சுட்டிய பொருளையே தான் புகுந்த புதுமொழியினுங் குறிக்குமல்லது, தன்மொழியில் ஒரோவிடத்துத்தான் அருகிச் சுட்டிய பொருளை அப்புதுமொழியிற் குறியாது இவ் வுண்மை, மொழியாராய்ச்சி வல்லார்க்கு நன்கு விளங்கிக்கிடந்த தொன்றாம். வாசகம், வாசகன் என்னுஞ் சொற்கள் பழைய தமிழ் நூல்களிலெல்லாம் 'மொழி', 'மொழிவல்லான்' என்னும் பொருள்களிலேயே வழங்கி வந்திருக்கின்றன. சிலப்பதிகாரம், பெருங்கதை முதலிய நூல்களையும், திருவாசகம், பிங்கலந்தை, சூடாமணி நிகண்டு முதலியவைகளை நோக்குக. பிற்றை ஞான்றை நூல்களிலும் 'வாசகன்' என்னுஞ்சொல் 'தூதுவன்' என்னும் பொருளில் வருதலை யாம் அறிந்தவரையில் யாண்டுங் கண்டிலேம். ஈதிங்ஙனமாகத் திருநாவுக்கரையர் ‘வாசகன்' என்னும் சொல்லைத் சால்லைத் தூதுவன் என்னும் பொருளில் அருளிச்செய்தாராகல் வேண்டுமென ஒருமுறையுமின்றித் தமக்குத் தோன்றியவாறு பொருளுரைத்தல் போலியுரையுமா மென்க. தமக்கு முற்பட்ட காலத்து நூல்களிலாதல், அல்லது தற்காலத்து நூல்களிலாதல் வாசகன்' என்னுஞ் சொல் தூதுவன் என்னும் பொருளில் வழங்கப்பட்டிருக்குமா யினன்றே, திருநாவுக்கரையர் தாமும் அதனை அப் பொருளில் வழங்கினாரெனக் கோடல் பொருத்தமாம்.

தமக்கு முன்னும், தங்காலத்தும் அச் சொல் அப்பொருளில் வழங்காவிடினும், தாமே அதனைப் புதுவதாக அப் பொருளில் வழங்கினாரெனக் கொள்ளாமோவெனின்; அங்ஙனம் அவரே அதனைப் புதுவதாக வழங்கினாரெனின் அதற்குச் சான்று என்ன? தாம் அருளிச்செய்த திருப்பதிகங்களில் வேறெங் காயினும் அச் சொல்லை அவர் அப்பொருளில் வழங்கினரா? என வினவப்படுமாகலானும், அவ் வினாவிற்கு விடைகூறுதல் ஏலாமையானும் அங்ஙனங் கொள்ளாமென்பது. எனவே, குடமுழ நந்தீசனை வாசகனாக் கொண்டார்” என்னுஞ் சொற்றொடரிற்போந்த ‘வாசகன்’ என்னுஞ் சொல்லுக்குத் ‘தூதுவன்' எனப் பொருளுரைத்தல் தமிழின்கண் ஒருவாற்றானும் பொருந்தாமையானும், பொருளுரைத்தலே எவ்வாற்றானும் பொருந்துதலானும் மாணிக்கம்போற் சிறந்த மொழிவல்லா ராகிய 'மாணிக்க வாசகரைக்’ கூறுதலே திருநாவுக்கரசு நாயனார் கருத்தாமென்க.

66

'மொழி வல்லான்'

எனப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_22.pdf/245&oldid=1587692" இலிருந்து மீள்விக்கப்பட்டது