உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 22.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* மாணிக்கவாசகர் வரலாறும் காலமும்

1

213

தூதுவன்' என்றே கூறல் வேண்டினாராயின் அச் சொல்லையே வைத்துக் குடமுழ நந்தீசனைத் தூதுவனாக் கொண்டார்”. என்றே ஓதியிருப்பார்: அதனாற் செய்யுளோசை சிதைதலு மின்று; அதனாலும் அவர்க்கது கருத்தன்றென்பது தெளிக.

அரிய பெரிய பழந்தமிழ் இலக்கியங்களைப் பெரிதும் ஆராய்ந்து பேருழைப்போடும் வெளியிட்டுத் தமிழ் உலகிற்குப் பெருநலம்புரிந்த நல்லிசைப்புலவர் திரு. சாமிநாதையரவர்கள், குடமுழ நந்தீசனை வாசகனாக் கொண்டார்' என்பது மாணிக்க வாசகர் மேற்றாதலைத் தாம் பதிப்பித்த பெரும்பற்றப் புலியூர்நம்பி திருவிளையாடற் புராண முகத்திற் றாம் எழுதிய ஆராய்ச்சிக்குறிப்பு ஒன்றிலும் (பக்கம் 97) இனிது விளக்கிக் காட்டி யிருக்கின்றார்கள். இஃதிங்ஙனமாகவும், இக் கோட் பாட்டிற்கு மாறாய் நிற்கும் எதிர்ப்பக்கத்தவர் சாமிநாதையரவர் களைத் தமக்கும் ஒரு துணையாகக் கொண்டது எற்றிற்கோ! வடமொழிக் கண் உள்ள 'மாணிக்கவாசகர் சரித்திர நூல்கள்’ இரண்டிலும் நந்திதேவரே மாணிக்கவாசகராய்ப் பிறந்தருளின ரென்று கூறப்பட்டதெனக் காட்டும் சாமிநாதையரவர்களு ரையை மறுத்துக் கூறுவோர், பின்னர் அவரைத் தமக்குத் துணை கூட்டுவதும் ஒரு புதுமையே! யாம் மேற்காட்டிய வாற்றால் ‘நந்திதேவரே மாணிக்கவாசகராய் வந்தனர்’ எனக் கூறும் வடமொழிப் புராணவுரையும் 'சிவகணநாதர் ஒருவரே மாணிக்கவாசகராய் வந்தனர்' எனக் கூறுந் தமிழ்ப் புராண வுரையுந் தம்முள் முரணாமை நன்கு விளங்கும். அது நிற்க.

1.

2.

Tamil Studies, 1914.

திருமந்திரம், 77.

அடிக்குறிப்புகள்

3.

4.

தனித்திருத்தாண்டகம், 11

கீர்த்தித்திருவகவல், 17

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_22.pdf/246&oldid=1587693" இலிருந்து மீள்விக்கப்பட்டது