உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 22.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

214

2. நான்காம் நூற்றாண்டிற்கு முற்பட்ட தமிழ்வேந்தர் பெயர் கல்வெட்டில் காணப்பெறாது

இனி, மாணிக்கவாசகப் பெருமான் தாமியற்றிய திருச்சிற்றம்பலக்கோவையாரில் “வரகுணனாந் தென்னவன் ஏத்து சிற்றம்பலத்தான்” (306) எனவும், “சிற்றம்பலம் புகழும், மயலோங் கிருங்களி யானை வரகுணன்" (327) எனவும் அருளிச் செய்தமையானே, அவர் வரகுண பாண்டியன் காலத்திலாதல், அல்லது அவனுக்குச் சிறிது பின்னராதல் இருந்தவராகக் கொள்ளல்வேண்டும் என்றும், கல்வெட்டுக்களாற் பெறப்படும் வரகுண பாண்டியர் இருவரில் கி.பி.862-இற் பட்டம் எய்திய இரண்டாம் வரகுணன் காலத்தில் மாணிக்கவாசகர் இருந்தனரென ஒருவரும், அவ்வாறு அல்லாக்கால் அவனுக்குப் பிற்பட்ட பத்தாம் நூற்றாண்டில் இருந்தவராதல் வேண்டுமென மற்றொருவருங் கூறுதலின் அவரது காலம் ஒன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து பத்தாம் நூற்றாண்டின் முற்பகுதிக்குட்படுவதாம் என்றும் முடிவு கட்டுதலே பொருத்தமாமெனின், அது பொருந்தாமை காட்டுதும்; வெறும் பெயர்களைக் கொண்டு உறுதிகட்டுதல் பிழைபாடாய் முடியும். இடைப்பட்ட காலத்துச் சேரசோழ பாண்டிய மன்னர்களாற் சதுக்கப்பட்ட கல்வெட்டுக்களை ஆராய்ச்சி செய்வோர்கள். சிலகாலத்திற்குமுன் அகப்பட்ட கல்வெட்டுக்களை நோக் குகையில் ‘வரகுணன்' எனப் பெயர் தாங்கிய பாண்டியன் ருவனைப் பற்றிய குறிப்புகளைக் கண்டார்கள். கண்டவுடன் அப்பெயர் பெற்ற பாண்டியன் ஒருவனே உளன் எனக் கருதிப் பிழையான வரலாற்றுக் குறிப்புகளை எழுதிவிட்டார்கள். பின்னர் அகப்பட்ட கல்வெட்டுக்களில் ‘வரகுணன்' என்னும் அப் பெயர் தாங்கிய மற்றும் ஒரு பாண்டியனைப் பற்றிய குறிப்புக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_22.pdf/247&oldid=1587694" இலிருந்து மீள்விக்கப்பட்டது