உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 22.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

―

1✰

215

  • மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் 1 ளிருக்கக் கண்டு. தாம் முன்செய்த பிழையினைத் திருத்தி அவ்வரலாற்றுக் குறிப்புகளை வேறாக மீண்டும் எழுதினார்கள்.

கல்வெட்டுக்களால் அறியப்படும் சேரசோழ பாண்டியர் கள் எல்லாரும் கி.பி. நான்காம் நூற்றாண்டுக்குப் பிற்பட்ட வர்கள். இந் நான்காம் நூற்றாண்டிற்கு முற்பட்ட அரசர்களால் சதுக்கப்பட்ட கல்வெட்டுத் தமிழ்நாட்டில் ஒன்றாயினும் இதுகாறும் அகப்படவில்லை.2 அவ்வரசர்களைப் பற்றிய வரலாற்றுக்குறிப்புகள் பழைய செந்தமிழ் இலக்கண இலக்கியங் களினும், இடைக்காலத்தெழுந்த சில புராணங்களின் மட்டுமே காணப்படுகின்றன. இடைக்காலத்துக் கல்வெட்டுக்களை ஆக்குவித்த அரசரின் பெயரோடு ஒத்த பெயர்பூண்ட வேற்றரசர் பலர் பழைய காலத்தில் இருந்தனரென்பது நூற்களாற் புலப்படுகின்றது. கல்வெட்டுக்களை ஆக்கிய அரசருள்ளும் ஒரே பெயரைப் பூண்டோர் பலர் கி.பி. நாலாம் நூற்றாண்டிற்கு முற்பட்ட பழந்தமிழ் இலக்கியங்களாற் கட்டப்படும் கரிகாற் சோழன் ஒருவன் உளன். இடைக் காலத்துக் கல்வெட்டுக்களாற் புலப்படும் கரிகாற்சோழர் மூவர் உளர்; அம் மூவருள் ஒருவன் குலோத்துங்கன் என மற்றொரு பெயரும் பூண்டு கி.பி.1070 முதல் 1118 வரையில் அரசுபுரிந்தவன்; மற்றொருவன், தன் மாமனான இராஜேந்திர சோழன் கி.பி.1053 முதல் 1060 வரையில் அரசு புரிந்த காலத்தில் உறையூரில் அரசு சலுத்தினவன்; மற்று மூன்றாம் கரிகாலன், ஆதித்தன் என வேறுமொரு பெயர்புனைந்து கி.பி.950 முதல் 985 வரையில் அரசு புரிந்தவன். ஆகவே, பழைய தமிழ் இலக்கியங்களிற் காணப்பட்ட கரிகாலனோடு, இடைக் காலத்துக் கல்வெட்டுக்க ளாற் பெறப்பட்ட கரிகாற்சோழர் மூவருங்கூட அப் பெயர் பூண்டோர் நால்வராவர்.3

4

3

இனிக், கல்வெட்டுக்களால் அறியப்படும் சோழ மன்னரிற் குலோத்துங்கன் எனப் பெயர்பூண்டோரும் மூவர் இருந்தன ரென்பது இதுகாறும் அறியப்பட்ட தொன்றாம். ஆகவே, கல்வெட்டுக்களாற் பெறப்பட்ட இரண்டு வரகுண பாண் டியர்க்கு முன், அப்பெயர் பூண்டோர் பிறர் இலர் எனக் கட்டுரைப்பது பெரிதும் பிழைபடுவதாகும். திருவிளையாடற் புராணங்களிற் சொல்லப்பட்ட 'வரகுணபாண்டியன்' கி.பி. நான்காம் நூற்றாண்டுக்கு முற்பட்டவனாவன் என்பதூஉம், கி.பி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_22.pdf/248&oldid=1587695" இலிருந்து மீள்விக்கப்பட்டது