உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 22.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

216

  • மறைமலையம் 22

நான்காம் நூற்றாண்டிற்கு முன்னெல்லாம் தமிழ்நாடு தமிழ் வேந்தரது ஆட்சிக்குள்ளிருக்கச் செந்தமிழ் மொழியானது மிக உயர்ந்த நிலையையடைந்து அரசர்களாலும் அவர்களால் போற்றப்பட்ட தமிழ்ப்புலவராலும் அவர் ஆக்கிய அரியபெரிய நூல்களாலும் பேரொளி விரித்து விளங்கினமையின்

அக்காலத்திருந்த வேந்தர்கள் தாம்செய்த அரிய செயல்கள் புலவர்களால் நூலிற் புகழ்ந்துரைக்கப்பட்ட அளவே அமையு மெனக்கொண்டு கருங்கற்களில் அவைதம்மைச் செதுக்கி வையாராயினரதனால் அக்காலத்திருந்த வரகுணனை யுள்ளிட்ட மன்னர்களின் கல்வெட்டுக்கள் காணப்படாவாயின வென்பதூஉம், அவ் வரகுணபாண்டியற்குப் பிற்பட்ட காலத்தே வடுகக் கருநாடர் தென்றமிழ் நாட்டிற் போந்து பாண்டி மண்டலத்தைக் கைக்கொண்டு தமிழ் நூல்களையும் சைவசமயத்தையும் அழித்துச் சமணமதத்தைப் பரப்பும் முயற்சி பெரிதுடையரானமையின் அவரை மூர்த்தி நாயனார் வென்று துரத்திச் செங்கோல் செலுத்திய காலந்தொட்டுப் பின்வந்த தமிழரசர்கள் தங்காலத்திற் றமிழ்மொழிப்பயிற்சி சுருங்குதல் கண்டும் வடநாட்டவர் அடுத்தடுத்துத் தமிழ்நாட்டின்மேற் படையெடுத்துப் புகுதல் கண்டும் ஆங்காங்குத் தாம் செய்த அரியசெயல்களைக் கருங்கற்களிற் பொறித்துவைப்பாராயின ரென்பதூஉம். இதனாற்றான் கி.பி. நாலாம் நூற்றாண்டிற்குப் பின்னர் மட்டுங் கல்வெட்டுக்கள் ஏராளமாகக் காணப்படுவ வாயின வென்பதூஉம் தெரிந்துணரற்பாலனவாம்.

இனிப், பாண்டி நாட்டின்கட் படையெடுத்து வந்து அப்போதிருந்த பாண்டிய மன்னனை வென்று, அவனது நாட்டைக் கைப்பற்றிக்கொண்டு அதிற் சிறிதுகாலம் அரசுபுரிந்தவன் சமணமதந் தழுவிய வடுகக் கருநாடர் மன்னவனாமென்பதும், பின்னர் அவனைத் தொலைத்துப் பாண்டிநாட்டிற் செங்கோல் செலுத்தினவர் மூர்த்தி நாயனாராவ ரென்பதும்,

“துன்னு சேனையிற் றுளங்கிய ஒருகருநாட

மன்னன் அன்னநாள் வந்தருட் டென்னனை யோட்டிக் கன்னி மண்டலங் கொண்டமண் கையர்கைவிழுந்து

முன்னநீடிய வைதிக முறையையும் ஒழித்தான்”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_22.pdf/249&oldid=1587696" இலிருந்து மீள்விக்கப்பட்டது