உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 22.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6

எனவும்,

மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் - 1

“வன்சமண் இருள்விட்டேக வைதிகத் தீபம் ஏற்றி

இன்பர சாள்வல் என்ன இயைந்தியா வரும்முன் சொன்ன அன்புறு பகுதி மூன்றுஞ் செய்தருச் சித்தார் போற்றி

முன்பருள் கரந்த சொக்க மூர்த்தியின் மூர்த்தி வேந்தை”

217

எனவும்.5 நம்பியார் திருவிளையாடலும், அதனினும் பழைய பெரியபுராணமுங் கூறுமாற்றான் அறியப்படும். வடுக ராவார்; தமிழ்நாட்டின் வடவெல்லையாகிய வேங்கடமலைக்கு வடபுறத்துள்ள நாடுகளில் உறைந்தவராவர்; அகநானூற்றிற் போந்த,

“வினைநவில் யானை விறற்போர்த் தொண்டையர்

இனமழை தவழும் ஏற்றரு நெடுங்கோட்டு

ஓங்குவெள் ளருவி வேங்கடத் தும்பர்க்

கொய்குழை அதிரல் வைகுபுலர் அலரி சுரியிரும் பித்தை கரும்படச் சூடி

இகன்முனைத் தழீஇய ஏறுடைப் பெருநிரை நனைமுதிர் நறவின் நாட்பலி கொடுக்கும்

வானிணப் புகவின் வடுகர் தேஎத்து”6

இஃது

என்னுந் தாயங்கண்ணனார் செய்யுளால் அறியப்படும். இங்ஙனம் வேங்கடமலைக்கு வடபாலுள்ள நாடுகளிலிருந்த வடுகரைச் சேர்ந்த மன்னன் ஒருவன் பாண்டி நாட்டின் மேற் படையெடுத்து வந்தபோது, அங்கே சமணசமயமானது மிகப் பரவியிருந்த தென்பது மேற்கூறிய புராணங்களால் நன்கு பெறப்படும். அவ்வாறு சமணசமயம் தமிழ்நாடெங்கும் மிகப் பரவிய காலம் திருநாவுக்கரசு நாயனார் இருந்த கி.பி. ஆறாம் நூற்றாண்டிற்கு முன்னே கி.பி. நான்கு அல்லது ஐந்தாம் நூற்றாண்டு துவங்கி ஏழாம் நூற்றாண்டின் நடுவரையிலேயாம். திருஞான சம்பந்தப் பிள்ளையாரோடு வழக்கிட்டுத் தோற்றபின் சமணர்கள் தமது ஒளி சுருங்கித், தங் கொள்கைகளைப் பரப்ப வலியற்ற வரானார்கள். வடுகக் கருநாடர் பாண்டி நாட்டுட் புகுந்தபோது து ஆண்டுச் சமணமதம் பரவியிருந்த தென்பதனால், அவர் அங்குப் புகுந்தகாலம் ஆறாம் நூற்றாண்டிலாதல் அதற்கு முற்பட்டதால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_22.pdf/250&oldid=1587697" இலிருந்து மீள்விக்கப்பட்டது