உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 22.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

218

மறைமலையம் 22

இருத்தல் வேண்டுமென்பது சொல்லாமே யமையும். திருஞானசம்பந்தப் பெருமான் காலத்தவரான நின்றசீர் நெடுமாறர் என்னுங் கூன்பாண்டியன்மேற் பகைத்துவந்து, நெல்வேலியில் அவரொடு பொருது தோற்றவரும் சேய்மையிலுள்ள வடபுலத் தரசரேயாதல்,

66

எனவும்,

66

ஆயவரசு அளிப்பார்பால் அமர்வேண்டி வந்தேற்ற சேயபுலத் தெவ்வர்எதிர் நெல்வேலிச் செருக்களத்துப் பாயபடைக் கடல்முடுகும் பரிமாவின் பெருவெள்ளங் காயுமதக் களிற்றின்நிரை பரப்பிஅமர் கடக்கின்றார்”

னையகடுஞ் சமர்விளைய இகல் உழந்த பறந்தலையிற் பனைநெடுங்கை மதயானைப் பஞ்சவனார் படைக்குடைந்து முனையழிந்த வடபுலத்து முதன்மன்னர் படைசரியப்

புனையுநறுந் தொடைவாகை பூழியர்வேம் புடன்புனைந்து”

8

எனவும் பெரியபுராணங் கூறுமாற்றால் தெளியப்படும். ஏழாம் நூற்றாண்டின் முற்பாதியில் வந்த வடபுல வடுகர் இங்ஙனம் நெடுமாறரால் தோல்விபெற்றுச் சென்றமையானும், இந் நெடுமாறர்க்குப் பின் பத்தாம் நூற்றாண்டு வரையிற் பாண்டியர் பலர் அரசாண்டமை கல்வெட்டுக்களிற் காணப்படுதலானும்.8 எட்டாம் நூற்றாண்டின்கண் இருந்தவராகப் பெறப்படும் சுந்தரமூர்த்திநாயனார் தாம் அருளிச் செய்த 'திருத்தொண்டத் தொகை’யில் மூர்த்தி நாயானாரையுங் கூறுதலின் அம் மூர்த்தி நாயானார் வென்று துரத்திய வடுகக் கருநாடர் பாண்டியனது அரசை வெளவியது ஆறாம் நூற்றாண்டிற்கு முற்பட்டதாதல் திண்ணமேயாம். இனிச் சின்னமனூரில் அகப்பட்ட செப்புப் பட்டயங்களானும், வேள்விக்குடிநன்கொடைப்பட்டயத் தானும் நெல்வேலி வென்ற நெடுமாறர்க்கு முன்னே செழியன் சேந்தன். மாவர்மன் அவநி சூளா மணி, கடுங்கோன் எனப் பாண்டியர் மூவர் அரசு புரிந்தமை தெளியப்படுகின்றது!" ஒவ்வோர் அரசரின் ஆட்சிக்கு முப்பது ஆண்டு விழுக்காடு வைத்துக் கணக்குப் பண்ணினால் பாண்டியர் மூவரின் அரசுக்குத் தொண்ணூறாண்டுகள் செல்லும். செல்லவே, நெடுமாறர்க்கு ஒரு நூற்றாண்டு முற்பட்ட காலத்தேதான் வடுகக் கருநாடர் பாண்டி

இப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_22.pdf/251&oldid=1587698" இலிருந்து மீள்விக்கப்பட்டது