உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 22.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

228

மறைமலையம் -22

“நிலவுக்கதிர் முடித்த நீளிருஞ் சென்னி உலகுபொதி யுருவத் துயர்ந்தோன் சேவடி மறஞ்சேர் வஞ்சி மாலையொடு புனைந்து

இறைஞ்சாச் சென்னி இறைஞ்சி வலங்கொண்டு"

என்னும் அந் நூலின் அடிகளால்" தெற்றென விளங்கா நிற்கும். அதுவேயுமன்றி, ஆடகமாடத் தறிதுயில் அமர்ந்த திருமாலின் சேடத்தைச் சிலர் கொண்டுவந்து கொடுத்து வணங்கச், செங்குட்டுவன் அச் சேடத்தை ஏற்றுத், தன் முடி சிவபிரான் திருவடியைத் தாங்குவதொன்றாகலின் அதனை அதன்கண் அணிதல் ஆகாதெனக் கருதித், தன் றோள்கள்மேல் அணிந்தனன் என்பது தெள்ளிதிற் புலப்பட,

66

ஆடக மாடத் தறிதுயில் அமர்ந்தோன் சேடங் கொண்டு சிலர்நின்று ஏத்தத் தெண்ணீர் கரந்த செஞ்சடைக் கடவுள் வண்ணச் சேவடி மணிமுடி வைத்தலின் ஆங்கது வாங்கி அணிமணிப் புயத்துத் தாங்கினன்”

என்று அந்நூலே கூறுதலுங் கருத்திற் பதிக்கற்பாற்று. ஆகவே, சேரமான் பெருமாளைத் தவிர அவர்தம் முன்னோரில் எவருஞ் சிவபிரான்மாட்டுப் பேரன்புடைய ரல்லரெனக் கிளக்கும் எதிர்ப்பக்கத்தவர் கூற்றுப் பொருந்தாக் கூற்றாய் ஒழிதல் காண்க. இதுகாறுங் கூறியவாற்றாற், சுந்தரமூர்த்தி தோழரான சேரமான்பெருமாட்கு முன்னிருந்த சிவனடியாரான சேரமன்னர் மற்றொருவரே தாம் ஆற்றும் வழிபாட்டு முடிவிற் சிவபிரான் திருச்சிலம்பொலி கேட்டவராதல் வேண்டு மென்பதூஉம். சுந்தரமூர்த்திகளைக் குறிப்பிடாத ‘கல்லாடம்' தான் குறிப்பிட்ட அச் சேரமன்னர் சேரமான்பெருமாள் அல்லரென்பதூஉம் நன்கு பெறப்படும்; பெறப்படவே. அக் கல்லாட நூல் சுந்தரமூர்த்தி நாயனார்க்குப் பிற்பட்டதாகாமல், அவர்க்கு முற்பட்டதாதலுந் தானே பெறப்படும் முற்பட்ட தாகிய 'கல்லாடநூலிற் காணப்பட்ட ‘பரிபுரக் கம்பலை யிருசெவியுண்ணுங், குடக்கோச் சேரன்' என்னுங் குறிப்பினையே ‘பெரியபுராணம்’ சேரன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_22.pdf/261&oldid=1587708" இலிருந்து மீள்விக்கப்பட்டது