உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 22.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* மாணிக்கவாசகர் வரலாறும் காலமும்

18

227

க்

மக்களின் வழக்கவொழுக்கங்கள் முதலியவற்றைச் சிறிது சிறிதா அறியப் பெறுகின்றோம். இந் நிலைமையில், அங்ஙனம் இறைவன் திருவடிச் சிலம்பொலி கேட்ட பழைய சேரமன்னர் எவர் என வினாதலும், அவரை ன்னார்தாம் என காட்டாவிடின் எமதுரை காள்ளற்பால தன்றென மொழிதலும் வெறும் போலியேயாம். இறைவனது திருவடிச் சிலம்போசை கேட்ட சேரமன்னர் ஒருவரின் குறிப்புக் கல்லாடத்துக் காணப்படுதலின், அஃது எம்மாற் புதிதாகப் படைத்திட்டுக்கொண்டு சொல்லப்பட்டது. அன்றென அவர் தெளியக் கடவர்.

இனிச், சேரமான் பெருமாளைத் தவிரச், சிவபிரான் மாட்டுப் பேரன்புடைய சேரமன்னர் வேறு உளரெனக் கூறுவாரைக் காணேம் என எதிர்ப்பக்கத்தவர் ஒருவர்தாம் சேர மன்னர் எல்லார் வரலாறுங் கூறக் கேட்டார்போல் நெகிழ்ந் துரையாடினர். முற்காலத்திருந்த சேரமன்னர்களும் அவர் வரலாறுகளும் பெருக அறியக்கூடாதிருக்கும் இந் நிலையில் இவ்வாறுரை நிகழ்த்தல் பெரியதோர் இழுக்காம். மேலும், சிலப்பதிகார நூலாசிரியரான இளங்கோவடிகளின் தமையனும், புகழோங்கிய வெற்றிவேந்தனும், கற்பின் கிழத்தியாகிய கண்ணகிக்குக் கோயில் எடுப்பித்தவனுமான சேரன் செங்குட்டுவன் சிவ சிவ பெருமான் திருவருளாற் றோன்றினவ னென்பது நன்கு விளங்கச்,

“செஞ்சடை வானவன் அருளினில் விளங்க வஞ்சித் தோன்றிய வானவ! கேளாய்”

என்று சிலப்பதிகாரம்' கூறுமாற்றால், இவனைப் பெற்ற சேரலாதன் என்னுஞ் சேரமன்னன் சிவபிரான் றிருவடிக் கண் மெய்யன்புடையவனாதல் இனிது பெறப்படும். இனி, அவ்வாறு பிறந்தருளிய அச்செங்குட்டுவனும் சிவபிரானையன்றி வேறெதனையும் வணங்காதவனென்பது, அவன் வடநாடு நோக்கிச் செல்லுங்கால் அவன் அப் பெருமானை வணங்கினமை கூறும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_22.pdf/260&oldid=1587707" இலிருந்து மீள்விக்கப்பட்டது