உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 22.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

―

1✰

233

  • மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் ரதான் இடர்ப்பாடில்லாத உரைபோலும்! முதலில் இவர் ச் சொல்லுக்குப் 'பொதுவான உரத்த ஓசை' என்று தாமாகவே ஒரு பொருள் சொல்லிக்கொண்டார்; அதன்பின் அவ் வுரத்த ஓசை வான்வெளியில் இறைவன் எழுப்பின தென்றார்: எதன் பொருட்டு என்பார்க்கு. நீலகண்ட யாழ்ப்பாணர்க்குப் பொற்பலகை இடுவித்தற் பொருட்டு என்றுஞ் சொல்லிக் கொண்டார். “தாரம் உய்த்தது பாணற் கருளொடே.” என்னுந் திருஞானசம்பந்தப் பெருமா னருளிய சொற்றொடரிற் போந்த ‘தாரம் உய்த்தது' என்பதற்கு இவர் கூறும் இவ்வளவு பொருளும் வலிந்த பொருளோ, 'இசையைப் பாடியது' என்னும் எமதுரை வலிந்த பொருளோ என்று ஒப்பிட்டுக் காணவல்ல சிறிதறிவுடை யார்க்கும் எமதுரையே நேர்பொருளாதல் தெற்றென விளங்கா நிற்கும். திருநீலகண்ட யாழ்ப்பாணர் ஏறியிருந்து பாடுதற்கு இருக்கையாக இறைவன் பலகை இடுவித்தனன் என்று திருஞானசம்பந்தப் பிள்ளையார் கூறல் வேண்டினாராயின், 'தட்டும் உய்த்தது பாணற் கருளொடே' என்று பாடித் தமது கருத்தை ஐயமற விளங்க வைத்திருப்பர். 'தட்டு’ தட்டு' என்னுஞ்சொற் ‘பலகை எனப் பொருள்படுதல், பழைய திவாகரத்துள் “தட்டியம் பலகை தட்டுமா வட்ட ணை எனப் போந்த சூத்திரத்தால் நன்கறியப்படும். 'தட்டு' என்னும் இச் சொல்லைவைத்துக் கூறுதலாற் செய்யுளோசையுஞ் சிதையாது, மோனையுங் கடாது. இங்ஙனம் எல்லாவாற்றானும் இசைந்து பலகை யெனும் பொருளையும் தெளிவுபெறக் காட்டும் 'தட்டு என்னுஞ் சொல்லை விடுத்து. இசையை யுணர்த்தும் ‘தாரம்’ என்னுஞ் சொல்லைவைத்துத் திருஞானசம்பந்தப் பிள்ளையார் அருளிச் செய்தமையானே, இறைவன் பாணபத்திரர் பொருட்டு சைபாடின அருட்டிறத்தைக் குறிப்பித்தலே அவர்தங் கருத்தாதல் தெள்ளிதிற் புலனாம். பாணபத்திரர் பாடிய சைக்கு உவந்து இறைவன் அவரது வறுமைதீரத் திருமகப்பாசுரங் கொடுத்து அன்பனாகிய பழைய சேரமன்ன னொருவன்பால் விடுத்தருளிய குறிப்பினைத் திருக்கோளிலிப் பதிகத்தில் "நாணமுடை வேதியன்" என்னுஞ் செய்யுளிற் 'பாணன் இசை பத்திமையாற் பாடுதலும் பரிந்தளித்தான் என்று பிள்ளையார் கூறுதலானும். “தார முய்த்தது பாணற்

""

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_22.pdf/266&oldid=1587713" இலிருந்து மீள்விக்கப்பட்டது