உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 22.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

234

  • மறைமலையம் - 22

கருளொடே" என்புழி அவர் குறிப்பித்ததும் பாணப்பத்திரரை யேயாதல் பெறப்படும்.

இனித் திருஞானசம்பந்தப் பிள்ளையார் காலத்தும் அவர்க்கு முற்பட்ட காலத்தும் வழங்கிய பொருள்களில், 'தாரம்' என்னுஞ் சொல்லுக்குப் பொருள்காணாது. பொது வான வல்லோசை என்று அதற்குத் தாம் வேண்டியவாறு பொருந்தாப் பொருளுரைத்து, மேலும் பலவற்றை வலிந்து வருவித்து ஆரவாரஞ்செய்த எதிர்ப்பக்கத்தவர் அவ்வளவில் அமையாது. தாரம் என்னும் அச் சொல்லுக்குத் தாம் அகராதியிற் கண்ட பொருள்களையெல்லாம் எடுத்துக்காட்டி, ங்ஙனம் பொருளுரைத்தல் ஆகாதோ? அங்ஙனம் பொருளுரைத்தல் ஆகாதோ? என்று வினா நிகழ்த்துகின்றார். இலக்கண இலக்கிய வரம்பில் நில்லாமலும், ஆக்கியோன் கருத்தை ஒட்டாமலும் எச் சொல்லுக்கு எப்பொருள்தான் கூறலாகாது! ஆ க்கியோன் கருத்தை அளந்து பாராது. அவனியற்றிய செய்யுட்குப் பத்து உரை கூறுவேம். பதினாறுரை கூறுவேம் என்று தந்திறமையை வியந்து கூறுவர்! இவ்வாறு

இஞ்ஞான்றைத் தமிழ்ப்புலவரிற்

பலர்

வியந்துரைக்குந் தமிழ்ப் புலவர்க்கும், சரித்திரவுண்மையை ஆராய்ந்து காட்டுவே மெனப் புகுந்து அதற்கு மாறாகப் பொருந்தாவுரை கூறி ஆரவாரம்புரியும் இவர்க்கும் வேறுபாடென்னை? அது நிற்க. 'தாரம்' என்னும் சொல்லுக்கு ‘எல்லை' எனவும், ‘பிளவு’ பிளவு' எனவும் பொருள் உண்டு என்கின்றார் வடமொழியில் தகரவெழுத்துக் குரிய நான்கு ஓசைகளில் மூன்றாம் ஓசையில் நிற்குந் ‘தார' என்னும் பெயர்ச்சொல்லுக்கே ‘பிளவு' என்னும் பொருளும், நான்காம் ஓசையில் நிற்குந் 'தார' என்னும் பெயருரிச்சொல்லுக்கே எல்லை' என்னும் பொருளும் ஆரியத்தில் உளவாம். தமிழில் துகாறும் அகராதி எழுதினோர். மொழிநூல்," வரலாற்று நூல்' என்னும் என்னும் இவற்றின் உணர்வு வாய்ப்பப் பெறாத வராகையால், இப்பொருளில் இச்சொல் தமிழ் மற்று இப்பொருளில் இஃது ஆரியம். இச்சொல் இன்ன காலத்து இப்பொருளில் வழங்கிற்று என்றெல்லாம் அவ்வச் சொற்பொருளுண்மை ஆராய்ந்து காட்டும் அறிவாற்ற லுடையரல்லர்; மற்றுத் தமிழினும் ஆரியத்தினுந் தாம் கண்ட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_22.pdf/267&oldid=1587714" இலிருந்து மீள்விக்கப்பட்டது