உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 22.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் - 1 18

235

கண்ட பொருள்களை யெல்லாம் தாங் குறித்த சொற்ளுக்குக் கூறி ஏட்டை நிரப்பிவிடும் நீரர். இங்ஙனமாகவே, “தாரம்’ என்னுஞ் சொல்லுக்கும் அகராதிக்காரர் பொருள்களை எழுதி நிரப்பியிருக்கின்றனர்; அதனால் அவருரை கொள்ளற் பாற்றன்று. வடமொழியில் இருவேறு சொற்களாய் வழங்கிய ‘தாரம்' என்பதற்கே ‘எல்லை’, ‘பிளவு' என்னும் பொருள்கள் உளவாம். யாம் ஆராய்ந்து பார்த்த மட்டில் தமிழ்நூல்களில் இச்சொல் இப் பொருள்களில் வழங்குதலைக் கண்டிலம். பழைய நிகண்டு நூல்களாகிய திவாகரம், பிங்கலந்தை, சூடாமணி முதலிய வற்றுள்ளும் இச் சொல்லுக்கு இ பொருள்களைக் காண்கிலம். இம் மூன்றனுள் முற்பட்டதாகிய திவாகர நூலின் காலத்தே இச் சொல்லுக்கு நான்கு பொருள்களே வழங்கின; இதற்குத்,

“தாரம் அரும்பண்டம் வெள்ளி அதன்ஒளி

சேரும் ஏழ்நரம்பில் ஓர்நரம்புஞ் செப்பும்”

என்று அந் நூல் நுவலுமாற்றால் விளங்கும். இந்நான்கு பொருள்களிலும் ‘அரும்பண்டம்', என்பதும், ‘ஏழிசையுள் ஒன்று' என்பதுமே மிகப் பழைய தனித்தமிழ் நூல்களிற் காணப்படுதலின் அவற்றை முதலிலும் ஈற்றிலும் வைத்து, 'வெள்ளி', 'வெள்ளியினொளி' என்னும் வேறு இரண்டு பொருள்களும் வடமொழியிலிருந்து வந்தனவாகலின் அவற்றை இடையினும் வைத்து அஃது ஓதுதல் உற்றுநோக்கற்பாலது. மற்றுப், பிங்கலத்தை நூலின் காலத்திலோ இச்சொல்லுக்கு ஏழுபெருள் வழங்கலாயின வென்பது.

“வல்லிசைப் பெயரும் வாழ்க்கைத் துணைவியும் யாழின் நரம்பும் அரும்பண்டமும வெண்டாதுந் தராவும் நாவுந் தாரம் என்ப

99

என்று அந்நூல் கூறுமாற்றால் விளங்கும் சூடாமணி நிகண்டும். “தாரம்’ வல்லிசை நாவெள்ளி தலைவி யோரிசை கண்ணென்ப, எனக் ‘கண்’ என்னும் மற்றொரு புதுப் பொருளுஞ் சேர்த்துக் கூறுகின்றது. இந் நிகண்டு நூல்களி னெல்லாங் காணப்படாத ‘பிளவு’, ‘எல்லை' என்னும் வடமொழிப் பொருள்களைத் திவாகர காலத்தை யடுத்துவந்த பழந்தமிழ்ச் செல்வராகிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_22.pdf/268&oldid=1587715" இலிருந்து மீள்விக்கப்பட்டது