உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 22.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

236

  • மறைமலையம் 22

திருஞான சம்பந்தப் பிள்ளையாரது திருப்பாட்டிற் போந்த 'தாரம்' என்னுஞ் சொல்லுக்கு ஏற்றியுரைத்தல் பொருந்துமோ? இச் சொல்லுக்கு இவ் வேறுபொருள்களை ஏற்றுதல் ஒரு சிறிதும் பொருந்தாமையால். இப் போலிப் பொருள்கள் பற்றி எதிர்ப்பக்கத்தவர் உரைத்த ஏனையவும் பொருந்தாப் போலி களாய் ஒழிதல் காண்க.

இனி, இறைவன் பலகை இடுவித்தது பாணபத்திரர்க்கே யன்றித், திருநீலகண்ட யாழ்ப்பாணர்க்கு அன்றென்பதூஉம் ஒரு சிறிது காட்டுதும். திருஞானசம்பந்தப் பிள்ளையார் திருகோளிலி என்னுந் திருக்கோயிலுக்குச் சென்று கட்டளை யிட்டருளிய திருப்பதிகத்துள், "நாணமுடை வேதியன் என்னுஞ் செய்யுளிற் “பாணன் இசை பத்திமையாற் பாடுதலும் பரிந்தளித்தான்” எனக் குறிப்பித்தது இறைவன் பாண பத்திரருக்குத் திருமுகங் கொடுத்ததை யாதல், அவர் ஏறியிருந்து பாடுதற்குப் பலகை யிடுவித்ததையாதல், அல்லது ஒருங்கே அவ்விரண்டையுமாதல் வேண்டும். 'பாணன் அன்பினால் இசைபாடிய அளவிலே இரங்கிக்கொடுத்தான்' என்றதல்லாமற் காடுத்தது இன்னதென்று கூறாமையாற் பாணபத்திரர்க்குத் திருமுகம் வழங்கியதும் பலகையிடுவித்தது மாகிய இரண் னையும் ஒருங்கு உய்த்துணர வைத்தலே பிள்ளையார்தந் திருவுளக்கருத்தாம். என்னை? ‘பரிந்தளித்தான்' என்னும் வினைக்குச் செயப்படுபொருள் ஒன்றே கூறல் வேண்டினராயின் அதனைக் கிளந்து கூறியிருப்பராகலானும் இறைவன் பாணபத்திரர்க்குப் பரிந்தளித்தன ஒன்றாகாமல் திருமுகமும் பலகையுமாகிய இரண்டாயிருத்தலின் அவ்விரண் டையும் ஆண்டுப் பெற வைத்தற்பொருட்டே இரண்டி லொன்றைக் கூறாது விட்டாராகலானும். 'சொல் இல்வழி இங்ஙனம் உய்த்துணர்தலே முறையா' மென்பது சேனா வரையர் முதலான பழைய உரைகாரர் கருத்தாகலானும் என்க.

L

பாணபத்திரர் மழையில் மிக நனைந்து தமது கையில் ஏந்திய யாழ் ஈரத்தால் இயக்குதற்கு ஆகாதவாறிருந்தும், தாம் சிவபிரான் றிருவடிக்கண் வைத்த அன்பு சிறிதும் மாறாது இசைபாடுதல் கண்டு ஐயன் இரங்கி, நனையாமல் அவர் ஏறியிருந்து பாடுதற்குப் பலகையிடுவித்தானென்றே நம்பியார் திருவிளையாடலும் பிறவுங் கூறாநிற்கும். இஃதிவ்வாறிருப்பப்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_22.pdf/269&oldid=1587716" இலிருந்து மீள்விக்கப்பட்டது