உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 22.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் - 1

237

பெரிய புராணமோ, திருநீலகண்ட யாழ்ப்பாணர் திருவால வாய் சென்று இறைவ னெதிரில் இசைபாட, இறைவன் அவரது யாழை வைத்தற்குப் பொற்பலகை இடுவித்தானென்று கூறுகின்றது. திருஞானசம்பந்தப் பிள்ளையாரோடு உடனிருந்த திருநீலகண்ட யாழ்ப்பாணர்க்கு இறைவன் பலகை இடுவித் தனனோ, அன்றிப் பாணபத்திரர்க்குத்தாம் இறைவன் பலகை யிடுவித்தனனோ என்பது ஆராயற்பாற்று. பெரிய புராணத்துட் கூறப்படும் வரலாறுகளுள் ஐயம் வந்துழி, அதனை அகற்றுதற்கு அதற்கு முந்திய முதனூலாகிய நம்பியாண்டார் நம்பி திருத்தொண்டர் திருவந்தாதி கருவியாயிருந் துவுகின்றது. இந்நூல், திருநீலகண்ட யாழ்ப்பாணர் வரலாற்றினைப் பின்வருமாறு ஒரே செய்யுளாற் கூறுகின்றது:-

66

"தனையொப் பரும்எருக் கத்தம் புலியூர்த் தகும்புகழோன்

நினையொப் பருந்திரு நீலகண் டப்பெரும்

பாணனை நீள்,

சினையொப் பலர்பொழிற் சண்பையர் கோன்செந்

தமிழொடிசை

புனையப் பரனருள் பெற்றவன் என்பர்இப்

பூதலத்தே.”

ர்

ச்

ச்செய்யுள், திருநீலகண்ட யாழ்ப்பாணர் திருஞான சம்பந்தப் பிள்ளையார் அருளிச் செய்த திருப்பதிகங்களை இசையிலிட்டுப்பாடி இறைவனருளைப் பெற்றாரென்று மட்டுஞ் சொல்கின்றதே யல்லாமல், இறைவன் அவர்க்குப் பலகை யிடுவித்தானென்று ஒரு சிறிதாயினுங் கூறுகின்றிலது. அவர்க்குப் பலகையிட்டதுண்டாயின் அதனைப் புகலுதற்கு இ செய்யுளில் இடம் மிகுதியுமிருக்கின்றது. 'தனையொப்பரும்', 'தகுப்புகழோன்', 'நினையொப்பரும்', 'சினையொப் பலர் பொழில்', என்பர் இப்பூதலத்தே முதலான அடைமொழித் தொடர்களை நீக்கிப் பலகையிட்ட வரலாற்றை எளிதிற் கூறிவிடலாம். அங்ஙனம் ஒருவரலாறு அவர் பொருட்டு நிகழாமையானும், அவரது வரலாறெல்லாம் திருஞான சம்பந்தப் பிள்ளையாரோடிருந்து இசைபாடியதொன்றே யாகலானும், அதனைச் சொல்லுதல் சில சொற்களால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_22.pdf/270&oldid=1587717" இலிருந்து மீள்விக்கப்பட்டது