உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 22.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

238

மறைமலையம் - 22

ஆகின்றமையானும், அவ்வாறு அடைமொழிகளை அழகுற நிரப்பிப் பாட்டை முடித்தாரென்பது இவ்வாறு திருத் தொண்டர் திருவந்தாதி' யிற் காணப்படாத ஒரு வரலாறு. த அதற்குப் பின்வந்த பெரிய புராணத்துள் மட்டுங் காணப் படுமாயின் அது பெரிதும் ஆராய்ந்து நோக்கற் பாலதாம். மேலும், பெரிய புராணத்தின் மட்டுங் காணப்படும் அவ் வரலாற்றுக்கு மாறானதொன்று வேறொரு பழைய நூலிற் காணப்படுமாயின், அவ் விரண்டனையும் நன்காராய்ந்து எது கைக்கொள்ளற் பாலதோ அதனையே கொள்ளல் வேண்டும். ஆகையால், பாணபத்திரர்க்குப் பலகையிட்டதனையும், திருநீலகண்டர்க்குப் தனையும் நோக்குவோம்:

பலகையிட்ட

ஒத்து

மதுரையிற் பாணபத்திரர் செல்வவளத்தாற் சிறந்து வாழ்தல்கண்டு, அவர்க்கு உறவினரான ஏனைப் பாணரெல்லாம் அவர்மேற் பொறாமைகொண்டு அவரை வெறுப்ப, அதுகண்ட இறைவன் பாணபத்திரர்க்குள்ள பேரன்பைப் புலப்படுத்துவான் வேண்டிப், பெருங் காற்றோடு கூடிய பெருமழையினைப் பெய்விக்க, அதற்குப் பின்வாங்காது நள்ளிருளினுங் காலாற் றடவிக்கொண்டு கோயிலிற் சென்று, இறைவனெதிரே வெள்ளத்தினும் நின்றபடியாய்ப் பாணபத்திரர் யாழினை இயக்கி இசைபாட, அது கண்டு ஐயன் இரங்கி, அவர் ஏறியிருந்து பாடுதற்கு ஓர் உயர்ந்த பொற்பலகை டுவிக்க, அவர் அதன்மேல் ஏறியிருந்து பாடினார். அவர்தம் உறவினரும் அவரது பேரன்பின் பெருக்கினயுைம், அவர்க்கு இறைவன் அருளிய திறத்தினையுங் கண்டு பொறாமை நீங்கினாரெனப் பெரும்பற்றப் புலியூர்நம்பி இயற்றிய பழைய திருவிளையாடற் புராணங் கூறாநிற்கும்.

மற்றுப் பெரிய புராணமோ, திருநீலகண்ட யாழ்ப்பாணர் திருவாலவாய் சேர்ந்து, தாம் பாணர்குலத்திற் பிறந்தமை பற்றிக் கோயிலினுட் செல்லப்பெறாமல் வாயிலில் நின்றபடியே தமது யாழினை வீக்கிச், சிவபிரான் அடியார்க்குச் செய்த அருட்டிறங் களையெல்லாம் விரித்துப் பண்களாக்கி, அவ் வியாழில் இட்டு உள்ளங் குழைந்து குழைந்து உருகிப் பாடினார். அவர்தம் அன்பின் பெருக்கை இறைவன் புலப்படுத்துதல் கருதி, அற்றைநள்ளிரவில் தம் தொண்டர்கட்குக் கனவிற் றோன்றி,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_22.pdf/271&oldid=1587718" இலிருந்து மீள்விக்கப்பட்டது