உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 22.pdf/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் -1

239

"யாழ்ப்பாணரைக் கோயிலினுள்ளே புகுத்துக” என்று ஏவத் தொண்டரெல்லாரும் விழித்தெழுந்து, திருநீல கண்ட யாழ்ப் பாணரின் பெருமையுணர்ந்து, மற்றைநாள் அவரைக் கோயிலினுள்ளே அழைத்துச் சென்று இறைவன் திருமுன்னர் விடுத்தனர். பாணரும் திருமுன்பிருந்து இறைவன் அருட்பாங்கு களை யாழிலிட்டு நெஞ்சம் நெக்குருகிப் பாடப், “பாணர்பாடும் அழகிய யாழ் நிலத்தின்மீதிருந்தால் ஈரந்தாக்கிக் கட்டு அழியும்; ஆதலால், அதனை வைத்தற்கு ஒரு பொற்பலகை இடுமின்!”என்று வான் வெளியில் ஓர் ஓசை எழத் தொண்டரெல்லாரும் அங்ஙனமே அதற்கொரு பொற்பலகை இட்டனரென்கின்றது.

இவ்விரண்டு வரலாறுகளுட் பாணபத்திரர்க்கு இறைவன் பொற்பலகை இடுவித்தமைக்கே பொருத்தமான ஏதுக் காணப் படுகின்றது. பாணபத்திரர்மேற் பொறாமை கொண்டு, அவர் றைவன்மேல் வைத்த அன்பின் பெருக்கை அறியாமல் இகழ்ந்து வந்த மற்றைப் பாணர்களுக்கு அவரது அன்பின் மிகுதியைப் புலப்படுத்துதல் வேண்டியே இறைவன் பெருங் காற்றோடு Ꮒ கூடிய பெருமழையைப் பெய்வித்தனன். பகற்பொழுதே யன்றி யன்றி இராப் பொழுதினும் இறைவன் திருக்கோயிலின் எதிரே சென்று இசைபாடுதலை ஓர் அன்பின் கடப்பாடாய்க் கொண்டொழுகிய பாணபத்திரர் அம் மழையினை ஒரு பொருட்படுத்தாது. அம் மழைநா ளிரவினும் நனைந்தபடியாய் நின்றே இறைவன் எதிரிற் பாடினர். அதுகண்டு இறைவன் இரங்கி, அவரும் அவரது யாழும் நனையாமைப் பொருட்டே, ஒருசிறு குடில்போல் மேலுங் கீழும் மறைப்பாகச் செய்யப்பட்ட பொன்னிறமான ஒரு பலகை இடுவித்தான்.

L

மற்றுத் திருநீலகண்ட யாழ்ப்பாணர்க்கோ அத்தகைய பகைவர் இலர். இறைவன் இவரது அன்பைப் புலப்படுத்தும் பொருட்டுச் செய்ததெல்லாம், தம் தொண்டர்தங் கனவிற் றோன்றி, “யாழ்ப்பாணரைக் கோயிலினுள்ளே புகுத்துக!” என்று அருளிச் செய்த தொன்றேயாம். தொண்டரும் அவரைக் கோயிலின் உள்ளே அழைத்துச் சென்றுவிட யாழ்ப்பாணர் தமது வழக்கம் போல் அங்கிருந்து இறைவன் புகழ்களை யாழிலிட்டுப் பாடினர். அப்போது மழை பெய்ததென்று ஏதுஞ் சொல்லப்படவில்லை. மேலும், யாழ்ப்பாணர் கோயிலினுள்ளே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_22.pdf/272&oldid=1587719" இலிருந்து மீள்விக்கப்பட்டது