உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 22.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் -1

1

241

பாடுதலைக் கண்டு இறைவன் இரங்கிப் பலகை யளித்ததனைப் "பரிந்தளித்தான்" என்பதோ, அவ்வாறு மழையினுங் காற்றினும் வருந்துதலின்றிக் கோயிலினுள்ளேயிருந்து இசைபாடிய திருநீலகண்ட யாழ்ப்பாணர்க்கு இறைவன் அருளியதைப் "பரிந்தளித்தான் என்பதோ என்று தமிழறிவு சிறிதுடை யாரைக் கேட்பினும், அவர், "பரிந்து அளித்தல்" அல்லது "இரங்கிக் கொடுத்தல்' என்னும் வினை, மழையினும் இடியினுங் காற்றினும் இருளினும் அன்பின் மாறாது நின்று பாடிய L பாணபத்திரர்க்குப் பலகையிட்டதனுக்கே பொருத்தமுடைத்தா மென அறிவுறுத்துவர்.

.

66

பாணனிசை

و,

அதுவேயுமன்றிப் பாணபத்திரர் வறுமையால் மிக வருந்தினமை கண்டு இறைவன் அவர்க்கு இரங்கித் திரு முகங் காடுத்துச் சேரமன்னன்பால் விடுத்தமையினையும் உட் கொண்டே திருஞானசம்பந்தபெருமான் பத்திமையாற் பாடுதலும் பரிந்தளித்தான்” என்று அருளிச் செய்தனராகலின், வறுமையான் அங்ஙனம் நலிவுறாத திருநீலகண்ட யாழ்ப்பாணர்க்கு அருள்செய்த தனைப் “பரிந் தளித்தான்” எனக் கூறினாரென்றல், சொற்களின் ஆற்றலறிந்து பொருள்கூற மாட்டாதார் கூற்றேயா மென்க. இன்னுந் “தாரம் உய்த்தது பாணற் கருளொடே" எனவும், "பாணனிசை பத்திமையாற் பாடுதலும் பரிந்தளித்தான் எனவும் பிள்ளையார் இருகாற் குறிப்பிட்டது பாணபத்திரரையே யாமென்பதற்கு. அவர் “வெய்யவன் பல்லுகுத்தது” என்னந் திருவாலவாய்த் திருச்செய்யுளில் “ஆலவாய் அரன் கையது வீணையே” என்று அருளிச் செய்து இறைவன் பாணபத்திரர் பொருட்டு யாழ்தாங்கிச் சாதாரியிசை பாடினதனைக் குறிப்பித்தமையே சான்றாம். இறைவன் பாணபத்திரர்க்காக சைபாடச் சென்றக்கால் யாழ் ஒன்று கொண்டு சென்றானென்பது, "பழையதோர் பொல்லம் பொத்திய பத்தர்யாழ்க் கோல்தோள் உழையதாக” என்னும் பரஞ்சோதி முனிவர் பாட்டானும். இசை பாடுங்கால் அவ் யாழை இயக்கியே பாடினனென்பது "குண்டுநீர் வறந்திட்டனன் நெடுங்கொடிக் குறுங்காய்ப் பத்தர்த் தண்டுநீள் நிறத்த நல்யாழ் டந் தழீஇத் தெறித்து” என்று மீண்டும் அவரே கூறினமை யானும் இனிது பெறப்படும்.

u

6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_22.pdf/274&oldid=1587721" இலிருந்து மீள்விக்கப்பட்டது