உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 22.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

242

  • மறைமலையம்

22

இங்ஙனமெல்லாம், இறைவன் பாணபத்திரர்க்குப் பொற்பலகை இடுவித்தமைக்கு ஏற்புடைய ஏதுக்கள் உளவாகத் திருநீலகண்ட யாழ்ப்பாணர்க்குப் பலகை இடுவித்தமைக்கோ அத்தகைய ஏதுக்கள் இலவாதலை ஒப்பவைத்து நோக்க வல்லார்க்குப் பாணபத்திரர்க்குப் பலகையிட்ட வரலாறே பொருத்த முடைத்தா மென்பதூஉம், நீலகண்ட யாழ்பாணர்க்குப் பலகை யிட்டிடதாகச் சொல்லும் வரலாறு பொருத்த மின்றாய்ப் ‘பாணர்” என்னும் பெயரொற்றுமை பற்றிப் பாணபத்திரர்க்குரியதனை அவர்க்குப் பின்னிருந்த நீலகண்ட யாழ்ப்பாணர்மேல் ஏற்றிப் பிறராற் கற்பித்துச் சேர்க்கப்பட்டதா மென்பதூஉம் நன்கு விளங்கும். எனவே, “தாரமுய்த்தது பாணற் கருளொடே” எனவும். “பாணனிசை பத்திமையாற் பாடுதலும் பரிந்தளித்தான் எனவும், 'ஆலவாயான்கை யதுவீணையே" எனவுந் திருஞானசம்பந்தப் பெருமான் அருளிச்செய்தவை யெல்லாம் அவர்தங் காலத்திற்கு முன்னிருந்த பாணபத்திரர் பொருட்டு இறைவன் நிகழ்த்திய திருவிளையாடல்களையே குறிப்பனவாமல்லது தங்காலத்துத் தம்மோடு உடனிருந்த திருநீலகண்ட யாழ்ப்பாணர்க்கு வேறுவகையாற் காட்டிய அருட்டிறங்களை அல்லவாமென்பது கடைப்பிடிக்க கடைப்பிடிக்க இப் பாணபத்திரர், திருஞானசம்பந்தருக்கு முற்பட்டவ ராதலோடு, மாணிக்க வாசகப் பெருமானுக்கும் முற்பட்டவராவர்; அதனாலன்றோ அடிகள் திருவாசகத்தில்8

66

8

“இன்னிசை விணையில் இசைந்தோன் காண்க! அன்னதொன்று அவ்வயின் அறிந்தோன் காண்க!”

என்று அருளிச்செய்தனர்.

""

இனிப், பாணபத்திரர் பெரும்பாலும் ‘பத்திரர்” எனவும், திருநீலகண்டயாழ்ப்பாணர் ‘பாணர்’9 எனவும் வழங்கப் படுவரென எதிர்ப்பக்கத்தவர் கூறினர். இவர் தமது கூற்றுக்கு மேற்கோள் காட்டாமையின், அது பொய்யுரையாதல் தானே பெறப்படும். மற்றுக் கல்லாடத்தின்கண் “தென்றிசைப் பாணன் அடிமை யான்” எனவும், “அன்புருத்தரித்த இன்பிசைப் பாணன்" எனவும், பாணபத்திரரே அங்ஙனம் ‘பாணன்’10 என்னுஞ் சொல்லால் வழங்கப்படுதல் காண்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_22.pdf/275&oldid=1587722" இலிருந்து மீள்விக்கப்பட்டது