உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 22.pdf/276

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* மாணிக்கவாசகர் வரலாறும் காலமும்

243

இனி, அறுபத்துமூன்று நாயன்மாருள் ஒருவரான திருநீலகண்டயாழ்ப்பாணரைத் திருஞானசம்பந்தப் பெருமான் தமது பதிகத்துட் புகழ்ந்துபாடாது. பாண பத்திரரைப் பாடினாரென்றல் யாங்ஙனம் பொருந்தும்? என்று அவ்வெதிர்ப்பக்கத்தவர் பொருந்தாப் போலிவினா ஒன்று நிகழ்த்தினார். நாயன்மார் அறுபத்துமூவர் என்னுந் தொகை, சுந்தரமூர்த்திகள் 'திருத்தொண்டத் தொகை

அருளிச் செய்தபின் னெழுந்ததே யல்லாமல், அவர்க்கு முற்பட்ட திருஞானசம்பந்தர் காலத்தது அன்றென்பதனை அவர் மறந்தார்போலும்! அற்றேற், சுந்தரமூர்த்திகள் ‘பாணபத்திரரை’ எடுத்து ஓதாமை யென்னை யெனின்; சைவசமயாசிரியர் மூவரும் பத்து அல்லது பதினொரு செய்யுட்கள் அடங்கிய பதிகங்களே அருளிச்செய்யுங் கடப்பாடுடையர்; அப்பர் அருளிய ‘சித்தத்தொகைத் திருக்குறுந்தொகை'யைத் தவிர ஏனையவெல்லாம் பெரும்பாலும் பதினொரு செய்யுட்களுள் அடங்குவனவேயாம். ஒருசிலவற்றில் மட்டும் பன்னிரண்டு செய்யுட்கள் உள்ளன. சுந்தரமூர்த்திகள் அருளிச் செய்த திருத்தொண்டத்தொகைப் பதிகம் பதினொரு செய்யுட்களே யுடையது. இவற்றுட் பத்துச் செய்யுட்களுள் அடங்கும் அளவே தனியடியார்களைக் கூறிக் கூறாதுவிட்ட அடியார் களை யெல்லாம் ஒருங்கு தொகுத்து அடக்குதற்குப் “பத்தராய்ப் பணிவார்க ளெல்லார்க்கும் அடியோன் என்னுஞ் செய்யு ளொன்றும் அவர் அருளிச்செய்தார். தனியடியாரைக் கூறும் பத்துச் செய்யுட்களில் அடங்காமையாலன்றோ, நக்கீரர். இடைக்காடர், கபிலர், உருத்திரசன்மர். வரகுணபாண்டியர். ஒளவையார் முதலான அடியார் பற்பலர் மொழியாது விடப்பட்டனர்.

L

கல்லாடர்.

சுந்தரமூர்த்திகள் தமக்கு முன்னிருந்த அடியார் எல்லாரையுந் தனித்தனியே கூறுவேமெனப் புகுந்து நூற்றுக் கணக்கான செய்யுட்கள் அருளிச்செய்திருந்தனராயின், ‘அவர் ஏன் இந்த அடியாரைச் சொல்லவில்லை? அந்த அடியாரைச் சொல்ல வில்லை? என்று வினா நிகழ்த்தலாம். மற்று அவர் அருளிச் செய்யப் புகுந்த தனியடியார் செய்யுட்களெல்லாம் பத்தேயாகலான். இவற்றுள் ஏனைப் பலர் ஓதப்படாமை என்னையென வினாதல். பொருளுண்மையறியாக் குறை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_22.pdf/276&oldid=1587723" இலிருந்து மீள்விக்கப்பட்டது