உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 22.pdf/277

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

244

  • மறைமலையம் - 22

பாடாய் முடியுமென்க. இனித், “திருவியமகத்தினுள்ளுந் திருநீலகண்டப் பாணர்க் கருளிய திறமும் போற்றி" எனப் பெரிய புராணத்திற் காணப்படுஞ் செய்யுள் இவ்வரலாற்று ண்மையறியாத பின்னையோரால் எழுதிச் சேர்க்கப்

பட்டதேயாம். இங்ஙனமே வரலாற்றுண்மைக்கு மாறான செய்யுள்கள் பற்பல பின்னையோரால் எழுதிப் பெரிய புராணத்தின்கட் சேர்க்கப்பட்டமையும். அச் செய்யுட்கள் ஆசிரியர் சேக்கிழாராற் செய்யப்பட்டனவாதல் சொல்லாமையும் சேக்கிழாரும் பெரிய புராணமும் என்னும் எமது ஆராய்ச்சி யுரையில் தக்க சான்றுகளோடு விளக்கியிருக்கின்றேம். ஆகவே, பாணபத்திரரைச்

சுந்தரமூர்த்திகள்

திருத்தொண்டத்

தாகை’யுள் எடுத்தோதாமையால், சுந்தரமூர்த்திகட்கு முன்னிருந்த திருஞானசம்பந்தப் பெருமானும் “தாரமுய்த்தது பாணற் கருளொடே.” “பாணனிசை பத்திமையால் பாடுதலும் பரிந்தளித்தான்" என்பனவற்றுட் பாணபத்திரரைக் குறித்துச் சொல்லியிரார் என வழக்குப்பேசுதல் ஆ! எவ்வளவு முறை யுள்ளதா யிருக்கின்றது! முன்னுள்ளோரான திருஞான சம்பந்தப் பிள்ளையார் ஒருவரைக் குறியாது விட்டனராயின், பின்வந்தோரான சுந்தரமூர்த்திகளும் பிள்ளையாரைப்

பின்பற்றி அவரைக் குறியாது விட்டனரெனப் புகலுதல் ருவாறு பொருந்தும். மற்றுப் பின்வந்தோரான சுந்தர மூர்த்திகள் சொல்லாது விட்டமையால், அவர்க்கு முன்னிருந்த திருஞானசம்பந்தரும் அவரைச் சொல்லாது விட்டனரென்பது யாங்ஙனம் பொருந்தும்? இன்னோரன்ன மயக்கவுரைகள் வழக்கு முறையாகா வென்றுணர்க. எனவே, மேற்காட்டிய சொற்றொடர்களிற் பிள்ளையார் குறிப்பிட்டது பாண பத்திரரையே யாதல் உள்ளங்கை நெல்லிக்கனிபோல் தெற்றென விளங்கா நிற்கும் என்றிதுகாறும் விளக்கியவாற்றால், திருஞானசம்பந்தப் பிள்ளையார் குறிப்பிட்ட பாணபத்திரர், சுந்தரமூர்த்திகள் தோழரான சேரமான் பெருமாள் நாயனார் காலத்தவராதல் செல்லாமை பெறப்பட்டது. இனிப், பாணபத்திரரைக் குறிப்பிட்ட கல்லாடனார், எல்லாம் ஓதாதுணர்ந்து பிள்ளைமைக்காலத்தே பேரருளாளராய் வயங்கிய திருஞானசம்பந்தப் பெருமானையும் அப்பரையுங் குறிப்பிடாமை யால், அவர் இவ்விருவர்க்கு முன்னும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_22.pdf/277&oldid=1587724" இலிருந்து மீள்விக்கப்பட்டது