உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 22.pdf/278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் -1

245

பாணபத்திரர்க்குப் பின்னும் இருந்தாராதலும் தானே பெறப்படும். பெறப்படவே, கி.பி. ஆறாம் நூற்றாண்டின் பிற்பாதி முதலிருந்த அப்பர்க்குக் குறைந்தது ஐம்பதாண்டுகள் முற்பட்ட காலத்தேதான் ஆசிரியர் கல்லாடனார் ‘கல்லாடம்' என்னும் அருந்தமிழ் நூலை ஆக்கினாராதல் வேண்டும். அதனாற் 'கல்லாடம்’கி.பி. ஐந்தாம் நூற்றாண்டின் ஈற்றிலாதல் ஆறாம் நூற்றாண்டின் துவக்கத்திலாதல் துவக்கத்திலாதல் இயற்றப்பட்டதொரு

நூலாதல் தேற்றமாம்.

1.

2.

3.

அடிக்குறிப்புகள்

சிலப்பதிகாரம் வேனிற்காதை 32.

இற்றைக்கு ஆயிரத்து நானூறாண்டின் முன் வடமொழியில் இசைநூல் இயற்றிய பரதரும். அறுநூற்றெண்ப தாண்டின் முன் இசைநூல் இயற்றிய சாரங்கதேவரும் தமிழிசையிலிருந்தெடுத்தே வடமொழிக்கண் இசை வகுக்கப்பட்டதெனக் கூறினாரென்பர் இவ்வாராய்ச்சிவல்ல விருதைச் சிவஞானயோகிகள்.

இசைத் தமிழிலிருந்தே எல்லா இசைவகைகளும் வடமொழிக்கட் சென்ற உண்மை ஆபிரகாம்பண்டிதர் மிகவிரிவாக இயற்றி வெளியிட்ட கருணாமிர்தசாகரம் என்னும் இசைத்தமிழ் நூலில் நன்கு விளக்கிக்காட்டப்பட்டிருக்கின்றது.

4.

Philology

5.

Historical Science

6.

விறகுவிற்ற படலம் 13

7.

விறகுவிற்ற படலம் 27

8.

திருவண்டப்பகுதி 35,36

9.

கல்லாடம் 44

10.

கல்லாடம் 15

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_22.pdf/278&oldid=1587725" இலிருந்து மீள்விக்கப்பட்டது