உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 22.pdf/279

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

246

5. திருவாசகம் கல்லாடம் புத்த சமண காலங்களில் தோன்றினமை

இனிப், ‘பா' வகையாலும் ‘திருவாசகம்’ ‘கல்லாடம்’ என்பன அப்பர் சம்பந்தர்க்கு முற்பட்ட காலத்தனவாதல் காட்டுதும். செந்தமிழ் மொழிக்குப் பழைமையாக உரிய பாக்கள் அகவலும் வெண்பாவுங் கலியும் வஞ்சியுமென நான்கேயாம் (தொல்காப்பியம், செய்யுளியல், 81,82,83,84). இவற்றுள்ளும் அகவற்பாவே மிகச் சிறந்ததாம். அதனானன்றே அகநானூறு’, ‘புறநானூறு', 'நற்றிணை’, ‘குறுந்தொகை’, ‘ஐங்குறுநூறு’, ‘பதிற்றுப் பத்து’, ‘பத்துப்பாட்டு', சிலப்பதி காரம்’, ‘மணிமேகலை', 'பெருங்கதை' முதலான பழைய நூல்களெல்லாம் பெரும்பான்மையும் அகவற் பாவினாலேயே ஆக்கப்படுவவாயின; அதனானன்றே தொல்காப்பியத்தும் அகவற்பாவே முன் வைத்துரைக்கப் பட்டது.கி.பி.இரண்டாம் நூற்றாண்டின் துவக்கம்முதல் தமிழ் நாட்டின்கண் தொகுதி தொகுதியாய் வந்து புகுந்த பௌத்தர் சமணரின் வழியே தமிழின் கண் வடமொழிக் கலப்பு நேர்வதாயிற்று. அ அக் கலப்பினால், அகவற்பாவில் நூலெழுதும் பழக்கம் வரவரக் குறையக் கலிப்பாவினின்று 'கட்டளைக் கலித்துறை' என்னும் ரு புதிய பாவும் அதிலிருந்து விருத்தமும், அகவற்பாவினின்று ஆசிரிய ஆ விருத்தங்கள் பலவுந் தமிழ்ப் புலவர்களால் உண்டாக்கப்பட்டன. ‘கட்டளைக் கலித்துறை’; ‘கலிவிருத்தம்’, ஆசிரிய விருத்தம் முதலிய பாக்கள் கி.பி. இரண்டாம் நூற்றாண்டிற்கு முற்பட்ட பழைய தமிழ் நூல்களுள் யாண்டுங் காணப்படாமை பெரிதுங் கருத்திற் பதிக்கற் பாலதாகும். கட்டளைக் கலித்துறை முதலான இப் புதிய பாக்களின் இலக்கணங்களும் 'யாப்பருங்கலம்', 'யாப்பருங்கலக் காரிகை', டைக்காலச் செய்யுளிலக்கணங்களிற் காணப்

முதலான

இடை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_22.pdf/279&oldid=1587726" இலிருந்து மீள்விக்கப்பட்டது