உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 22.pdf/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க

மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் - 1

247

படுதல் போலத், 'தொல்காப்பியத்'தின்கட் காணப்படா மையும் பெரிதும் நினைவுகூரற்பாலதாம். இஃதொன்றே ‘தொல் காப்பியம்' இவற்றிற்கெல்லாம் முற்பட்ட மிகப் பழைய நூலாதலைத் தெரிக்கும். அகவற்பாக்களாலும் கலிப்பாக் களாலும் ஆக்கப்பட்ட 'சிலப்பதிகாரம்' என்னும் உயர்ந்த அருந்தமிழ் நூலை ஆறு ஒன்பது பத்துப் பதினொன்று பன்னிரண்டாம் நூற்றாண்டுகளில் இயற்றப் பட்டதென்றும், தால்காப்பியம்' நான்காம் நூற்றாண்டின் கண் இயற்றப் பட்டதென்றும், தமக்குத் தோன்றிய வாறெல்லாம் எளிதாகக் கூறினாரும் உளர். பழைய தமிழ்ச் செய்யுள் வழக்கும். சொல்வழக்கும், புலனெறிவழக்கும் ஆய்ந்துணர்ந்தனராயின் அவரெல்லாம் அங்ஙனம் பிழைபட உரையார்; அவை யுணரப் பெறாமையோடு, வடமொழி நூல்களின் தொன்மையை உயர்த்தித் தமிழ் நூல்களின் தொன்மையைக் குறைத்துவிடல் வேண்டுமென்னும் பேரவாவும் உடைய அவர் தமிழை இழித்ததற்கு யாதுதான் சொல்லார்! அவர் திறம் நிற்க. இரண்டாம் நூற்றாண்டிற்குப் பின்னே துவங்கி இன்றுகாறும் இயற்றப்பட்டுவருந் தமிழ்ச் செய்யுள் நூல்களெல்லாம் ஆயிரத்திற்குத் தொள்ளாயிரத்துத் தொண்ணூற்றொன்பது விழுக்காடு விருத்தப் பாக்களாலும், சிற்சில ‘கட்டளைக் கலித்துறை’ யாலும் இயற்றப்பட் யாலும் இயற்றப்பட்டு வருதல் எல்லார்க்குந் தரிந்த தொன்றாம்; இவற்றினிடையிற் பிறந்தனவாயிற், 'சிலப்பதிகாரத்’ துள் இப் பெற்றிப்பட்ட பாக்கள் ஒருசிறிதுங் காணப்படாமையும். இப் பாக்களைப்பற்றிய இலக்கணங்களும் அங்ஙனமே 'தொல்காப்பியத்' துட் காணப்படாமையும் என்னையென்று நடுவுநின்று நோக்கவல்ல சான்றோர்க்குச் 'சிலப்பதிகாரமும்’, ‘தொல்காப்பியமும்' கி.பி. மூன்றாம் நூற்றாண்டிற்கு முற்றொட்டே உள்ள நூல்களாதல் நன்குவிளங்கும்.

இனிக், கி.பி. மூன்றாம் நூற்றாண்டு துவங்கித் தமிழின்கட் புதியனவாய்த் தோன்றிய கட்டளைக் கலித்துறையும் அதன் வழியே பிறந்த விருத்தங்களும், அம் மூன்றாம் நூற்றாண்டிற்குப் பின் இயற்றப்பட்ட நூல்களில் மெல்ல மெல்லப் புகுந்து ஒரு முந்நூறாண்டுகள் வரையிற் பழைய அகவற்பா வெண்பா கலிப்பா என்பவற்றோடு போராடி, அவற்றை முழுதுந்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_22.pdf/280&oldid=1587727" இலிருந்து மீள்விக்கப்பட்டது