உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 22.pdf/281

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

248

மறைமலையம் - 22

துரத்திவிட மாட்டாமையிற் சிற்சில நூல்களில் அவற்றோடு உடனிருந்தும். தமிழ்ப்பற்று மிகவுடைய சிலரால் இயற்றப்பட் வேறுசில நூல்களிற் பழைய பாக்களே முழுதும் இடம்பெற்று நிற்கத் தாம் மற்றுஞ் சிலவற்றிற் குடி புகுந்தும் இவ்வாறெல்லாம் ஆறாம் நூற்றாண்டு வரையில் அல்லற்பட்டுக், கடைப்படியாக ஆறாம் நூற்றாண்டுமுதற் சைவசமயக் கிளர்ச்சியின் பேருதவி கொண்டு பழைய தமிழ்ப்பாக்களை முற்றும் ஒட்டிப் பின்னெழுந்த நூல்களிலெல்லாந் தாமாகவேயிருக்க இடம்பெற்றன. கி.பி. மூன்றாம் நூற்றாண்டிலிருந்து ஆறாம் நூற்றாண்டுவரையில் இயற்றப்பட்ட நூல்களிற் புதிய கட்டளைக் கலித்துறையும் விருத்தமும் பழைய தமிழ்ப் பாக்களாகி அகவல் வெண்பா கலி என்பவற்றோடு விரவி. அவற்றோடு தாமும் இருக்க இடம் பெற்றது முதன்முதல் திருவாசகம்’ ஒன்றிலேதான். ‘திருவாசகம்' பழைய தமிழ்ச் செய்யுள் வழக்கையும் பண்டைச் சொற்பொருட் புலனெறி வழக்கையும் பெரும்பான்மையுந் தழுவி இடையிடையே புதிது புகுந்த பாவகைகளையும் சொற்பொருள்களையும் ஏற்று நிற்கின்றது. மாணிக்கவாசகப் பெருமான் அருளிச் செய்த மற்றொரு நூலாகிய ‘திருச்சிற்றம்பலக் கோவையார்’ பண்டைத் தமிழ்ப் புலனெறி வழக்கை முற்றுந் தழுவிப், பாவகையில் மட்டும் புதிதுபுகுந்த ‘கட்டளைக் கலித்துறை'யால் ஆக்கப் பட்டிருக்கின்றது. இனித், 'திருவாசகத்'திற் பழைமையும் புதுமையும் ஒருங்கு விரவிநிற்றலைச் சிறிது காட்டுதும். திருவாசகத்தின் முதற்செய்யுள் பழந்தமிழ்ப் பாவாகிய கலிவெண்பா' வால் ஆக்கப்பட்டிருக்கின்றது. அதற்குப் பின்னுள்ள மூன்று செய்யுட்களும், ‘பத்துப்பாட்டுக்'களிலுள்ள அகவற்பாக்களைப்போல் நீண்ட அகவற்பாக்களால் ஆக்கப் பட்டிருக்கின்றன. முதற்கணுள்ள இந் நான்குபாக்களும் சொன்னடையிலும் பொருளமைப்பிலும் 'பத்துப்பாட்டு’களை ஒத்திருக்கின்றன. அவற்றுள் ‘திருவண்டப்பகுதி'யிற் போந்த ஒரு பகுதியை ஈண்டெடுத்துக் காட்டுகின்றோம்:

66

பாமர னந்தப் பழங்கடலதுவே

கருமா முகிலிற் றோன்றித்

திருவார் பெருந்துறை வரையிலேறித்

திருத்தகு மின்னொளி திசைதிசை வரிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_22.pdf/281&oldid=1587728" இலிருந்து மீள்விக்கப்பட்டது