உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 22.pdf/283

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

250

மறைமலையம்

22

இன்ப விமிழிசை ஓர்ப்பனள் கிடந்தோள்

அஞ்செவி நிறைய ஆலின வென்றுபிறர்

வேண்டுபுலங் கவர்ந்த ஈண்டுபெருந் தானையொடு விசயம் வெல்கொடி யுயரி வலனேர்பு

வயிரும் வளையும் ஆர்ப்ப அயிர

செறியிலைக் காயா அஞ்சனம் மலர முறியிணர்க் கொன்றை நன்பொன் காலக் கோடற் குவிமுகை அங்கை அவிழத் தோடார் தோன்றி குருதி பூப்பக் கான நந்திய செந்திலப் பெருவழி வானம் வாய்த்த வாங்குகதிர் வரகிற் றிரிமருப் பிரலையொடு மடமான் உகள எதிர்செல் வெண்மழை பொழியுந் திங்களின் முதிர்காய் வள்ளியங் காடுபிறக் கொழியத் துனைபரி துரக்குஞ் செலவினர்

வினைவிளக்கு நெடுந்தேர் பூண்ட மாவே.

وو

பத்துப்பாட்டுக்களில் ஒன்றான 'முல்லைப்பாட்டின்' பகுதியாகிய இதற்கும், மேலெடுத்துக் காட்டிய திருவாசகச் செய்யுட் பகுதிக்கும் வேறுபாடு மிகுந்திலாமை தமிழ்ச் செய்யுள் வழக்கில் நன்கு பயின்றார்க்கெல்லாந் தெள்ளிதிற் புலனாம். இவை யிரண்டிற்குமுள்ள வேறு பாடெல்லாம் ‘திருவாசகத்' தில் வடசொற்கள் சிறிது கூடக் கலக்க இயற்கைப் பொருள் களோடு சைவசமயப் பொருள்கள் ஊடுருவி மிளிர்தலும் 'முல்லைப் பாட்டு' பகுதியில் வடசொற்கள் மிகச் சிலவாய்க் கலக்க இயற்கைப்பொரு ணிகழ்ச்சிகள் மட்டும் விளங்கித் தோன்றுதலுமே யாம்.

த் திருவாசகப் பகுதி முப்பது வரிகளிலும் உள்ள நூற்றெழுபத்து மூன்று சொற்களில் நூற்று ஐம்பத்தாறு சொற்கள் செந்தமிழ்ச் சொற்கள் ஏனைப் பதினேழும் வடசொற்கள்; மற்று முல்லைப்பாட்டின் பகுதி பதினெட் டடிகளில் உள்ள நூறுசொற்களில் தொண்ணூற்றெட்டுச் செந்தமிழ்ச் சொற்கள். இரண்டு மட்டுமே வடசொற்கள். ஆகவே, திருவாசகத்தில் நூற்றுக்குப் பத்து விழுக்காடும்

L

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_22.pdf/283&oldid=1587730" இலிருந்து மீள்விக்கப்பட்டது