உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 22.pdf/308

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் -1 1

275

செய்யுளில் உள்ள "இமயம்பூத்த கனைமாண் டொட்டி" என்னும் அடி மேற் கோளாகக் காட்டப் பட்டிருக்கின்றது.

ஆகவே, உரையாசிரியரெவருங் ‘கல்லாடத்' தினின்று மேற்கோள் காட்டவில்லை என்பாருரை ஆராய்ச்சியுணர் வில்லாதார் போலியுரையாய் முடிதலின், அது கொள்ளற் பாற்றன்றென மறுக்க மறுக்கவே, கல்லாடம் இயற்றிய ஆசிரியர் கல்லாடனார் உரைகாரர் பரிமேலழகியார் காலத்திற்கு முற்பட்டவராதலோடு, தம்மால் அருளிச் செய்யப்பட்ட 'திருக்கண்ணப்பதேவர் திருமறம்' என்னும் அகவற் செய்யுளைப் பதினோராம் திருமுறையிற் கோத்த நம்பியாண்டார் நம்பி காலத்திற்கும் முற்பட்டிருந்தாராதல் தானே பெறப்படும் என்க. எனவே. கி.பி. பத்தாம் நூற்றாண்டிற்கு முற்பட்டதாகக் கல்லாடத்தின் காலந் துணியப்பட்டமையின், இனி, அஃது அதற்கும் முற்பட்டு எக்காலத்தில் இயற்றப்பட்டதென்று வினாவுவார்க்கு விடை ஆறாம் நூற்றாண்டின் துவக்கமா மென்பது முன்னரே நன்கு விளக்கப்பட்டது. என்றிதுகாறும் ஆராய்ந்துரைத்த வாற்றால், 'திருவாசகம்', 'கல்லாடம்' என்பன பாவகையாலும் கி.பி. ஏழாம் நூற்றாண்டிற்கு முற்பட்ட நூல்களாதல் தெற்றென விளங்காநிற்கும். இவ்வாறு நூல்களின் சொல்லாராய்ச்சியாலும், பா ஆராய்ச்சியாலும் அந் நூல்களின் கால வரையறை துணியப்படுமென ஆங்கில அறிஞரும் இம்முறையைப் பெரிதுந் தழுவுப8 அதுகிடக்க.

இதுகாறுங் கூறிய 'கல்லாடநூற்' காலவரையறையாது, பழந்தமிழ் நூல்களும் புதுத்தமிழ் நூல்களுந் தோன்றிய கால எல்லைகள் புலனாகாமல் ஒருங்கு விராய்க்கிடந்த சிக்கினைப் பிரித்து அவ்வவற்றின் கால வெல்லைகளை வரையறுத்ததற்கும். அவ்வந் நூல்களின் சொற்பொருட் பெற்றி தெளிந்து உண்மை காண்டற்கும் பெரியதோர் உதவியாய் நிற்றலின், அதனை இத்துணை விரித்து விளக்கல் இன்றியமையாததாயிற்று. இக் கல்லாடநூலின் பாவகைப்பற்றி யெழுந்த ஆராய்ச்சியில், இக் கட்டுரைப் பொருளான ‘திருவாசகந்’, ‘திருக்கோவையார்’ என்பவற்றின் பாமுறையும் ஆய்ந்து உரைத்தற்கு இடங்கிடைத்த மையின், “ஒன்றின முடித்தல் தன்னினம் முடித்தல்" என்னும் உத்திபற்றி அவற்றையும் உடன்வைத்து விளக்கலாயினேம்.

க்

க்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_22.pdf/308&oldid=1587861" இலிருந்து மீள்விக்கப்பட்டது