உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 22.pdf/307

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

274

66

மறைமலையம்

22

'அரிமே லழகுறூஉம் அன்பமை நெஞ்சப் பரிமே லழகன் பகர்ந்தான் - விரிவுரைமூ தத்கீரிஞ் ஞான்று தனிமுருகாற் றுப்படையாம் நக்கீர னல்ல கவிக்கு

وو

என்னும் அதன் உரைச்சிறப்புப் பாயிரத்தால் இனிதுணரப் படும். இன்னும், “மொய்ம்பிற் சுடர்விடுபு வண்புகழ் நிறைந்து வசிந்து வாங்கி நிமிர்தோள்"12 என்னுந் 'திருமுருகாற்றுப்படை' அடியுரையில் “இனி மொய்ம்பினை யுடைத்தாய் ஒளிவிட்டு நிறைந்து வளையவேண்டுமிடம் வளைந்து நிமிரவேண்டு மிடம் நிமிருந் தோள்” என்றும் உரைப்பர்” என நச்சினார்க்கினியர் காட்டியிருக்கும் வேறுரை அவ்வடிக்குப் பரிமேலழகர் எழுதிய

வுரையாகவே இருத்தலின், திருமுருகாற்றுப்படைக்குப்

66

66

பரிமேலழகர் எழுதிய உரை நச்சினார்க்கினியர் காலத்திற்கும் முற்பட்டதாதல் துணியப்படும். மேலும், திருக்குறள் உரையில் திருவுடை மன்னரைக் காணில் திருமாலைக் கண்டேனே என்னும்”13 என்னுந் திருவாய்மொழியை எடுத்துக் காட்டி” என்று பெரியாரும் பணித்தார்” என்று கூறுமாறு போலவே. 'தொண்டகச் சிறுபறை குரவை அயர அயர”14 என்பதன் உரையிலும், 'குரவை ஆய்ச்சியரோடு கோத்ததும்”15 என்னுந் திருவாய் மொழியை எடுத்துக்காட்டி” எனப் பெரியாரும் பணித்தமை யானும் அறிக” என்று உரையெழுதியிருத்தலை நோக்கின், திருமுருகாற்றுப்படைக்குள்ள இப் பழையவுரை பரிமேலழகர் இயற்றியாதாதல் நன்கு துணியப்படுவதாகும்.

66

தாகிய

ங்ஙனமாக நச்சினார்க்கினியர் உரைக்கும் முற்பட்ட 'திருமுருகாற்றுப்படை பரிமேலழகருரையின் இரண்டிடங்களிற் கல்லாடத்தினின்று மேற்கோள்கள் காட்டப்பட்டிருக்கின்றன. ஒன்று: “ஓடாப் பூட்கைப் பிணி முகம் வாழ்த்தி”16 என்பதன் உரையில், “பொடித்து அரும்பாத என்னுங் கல்லாடச் செய்யுளில் (9) உள்ள “பிணிமுக மஞ்ஞை செருமுகத் தேந்திய” என்னும் அடி மேற்கோளாகக் காட்டப் பட்டிருக்கின்றது; மற்றொன்று; “நெடும் பெருஞ் சிமயத்து நீலப் பைஞ்சுளை, ஐவரும் ஒருவன் அங்கை ஏற்ப. அறுவர் பயந்த ஆறமர் செல்வ”” என்பதன் உரையிற் கல்லாடத்தின் 2ஆது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_22.pdf/307&oldid=1587860" இலிருந்து மீள்விக்கப்பட்டது