உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 22.pdf/306

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாணிக்கவாசகர் வரலாறும் காலமும்

1

273

வ, சமண சைவ

இனிக், கி.பி. ஐந்தாம் நூற்றாண்டு ஆறாம் நூற்றாண்டு களிற் பழைய தமிழ்ப்பா வழக்கு முற்றும் வீழ்ந்திலாமை மேற்காட்டின மாதலின், இக் காலங்களிற் பண்டைச் செந்தமிழ் நெறியே முற்றுந் தழீஇயெழுந்த ‘கல்லாடம்’, ‘பெருங்கதை’ என்பனவும். வை தம்மை யடுத்துத்தோன்றிய ானா மிர்தமும்' முழுவதூஉம் அகவற்பாவினாலேயே யாக்கப்பட்டு விளங்குவவாயின. அற்றேல், இம் மூன்று நூல்களையும் திருவாசக' காலத்தோடொப்ப மூன்றாம் நூற்றாண்டின்கட் படுத்து ஓதாமையென்னையெனின்; இவை, சமண காலங்களிற் றோன்றி, அச் சமயங்களில் வழிப் புகுந்த வடசொற்களுங் குறியீடுகளும் உடைமையின் புத்தகாலத்திற் பிறந்த திருவாசகத்தோடு உ ன்வைத்து வத்து எண்ணுதல் ஆகாதென்க. இதனை முன்னேயும் விளக்கினோம். அற்றேற், கல்லாடம் உரையாசிரியர்களால் மேற்கோளாக எடுத்துக் என்பது ஒன்றேகொண்டு அதன் ஆசிரியரை ஒருவர் பதின்மூன்றாம் நூற்றாண்டிற்குப் பின்வந்தவர் எனக் கூறினாராலெனின்;" அவர் நன்காராயாது கூறினமையின் அவருரை கொள்ளற்பாற்றன்று. சிவபிரான் மாட்டும் அவனடியார் மாட்டும் பேரன்புடையரெனக் கல்லாடம்’என்னும் நூல்கொண்டே துணியப்படும். அதன்

காட்டப்படவில்லை

ஆசிரியர் கால்லாடனார் அருளிச்செய்த ‘திருக்கண்ணப்ப தேவர் திருமறம்' என்னுந் திருப்பாட்டுங் கல்லாடத்தைப் போலவே அகவற்பாவினாலமைக்கப்பட்டு நம்பியாண்டார் நம்பி கோத்த பதினோராந் திருமுறைக்கட் காணப்படுதலானும், நம்பியாண்டார் நம்பி கி.பி. பதினோராம் நூற்றாண்டின் துவக்கத்திலிருந்தாரென்பது கல்வெட்டுகளாற் றுணியப்படுத லானும்" இக் கல்லாடனார் காலம் பதினோராம் நூற்றாண் டிற்கு முற்செல்வதாமல்லது. அதற்குப்பின் பதின் மூன்றாம் நூற்றாண்டிலாதல் அதற்கும் பின்னுமாதல் செல்வதாகாது.

இனி, உரையாசிரியர் எவருங் 'கல்லாடத்'தை மேற் கோளாக எடுத்திலர் என்பதும் உண்மையன்று. ஏனெனில், 'திருமுருகாற்றுப் படை’க்கு நச்சினார்க்கினியர் எழுதிய உரையேயன்றிப் பரிமேலழகர் எழுதிய ஓர் உரையும் உண்டு.

அஃது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_22.pdf/306&oldid=1587859" இலிருந்து மீள்விக்கப்பட்டது