உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 22.pdf/310

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

277

7. வடநாட்டிற் கல்வெட்டுகள் உண்டானமைக்கு ஏது

இனி, மாணிக்கவாசகப் பெருமானாற் குறிப்பிடப்பட்ட வரகுணபாண்டியன், கல்லாடத்திற் குறிக்கப்பட்டபடி' கருநடர் வேந்தன் மதுரையை வெளவிப் பாண்டியனரசைக் கைப்பற்று தற்குமுன் (அஃதாவது ஐந்தாவது நூற்றாண்டிற்குமுன்) கல்வெட்டுகள் இத்தமிழ்நாட்டில் உண்டாகாத காலத்தில் இருந்தோனாவ னென்பதூஉம். திருவிளையாடற் புராணங்கள் இரண்டிலுஞ் சொல்லப் பட்டோன் இவனேயல்லாமல் இடைக்காலத்துக் கல்வெட்டுகளாற் பெறப்பட்ட வரகுண பாண்டியர் இருவரில் ஒருவன் அல்லனென்பதூஉம் விளக்கப் புகுவாம். போர்க்களத்திற் புறங்கொடாது பொருது வீழ்ந்த மறவர்க்கு மட்டும், அவர்தம் பெயரும் பெருமையும் எழுதிக் கல்நடுதல் முற்காலத்து உள்ள வழக்கென்பது.

“காட்சி கால்கோள் நீர்ப்படை நடுகல்

சீர்த்தகு மரபிற் பெரும்படை வாழ்த்தல் என்று இருமூன்று வகையிற் கல்லொடு புணர்'

என்று ஆசிரியர் தொல்காப்பியனார் ஓதுமாற்றானும்,2 அகநானூற்றில் நோய்பாடியார்.

"நல்லமர்க் கடந்த நாணுடை மறவர் பெயரும் பீடும் எழுதி யதர்தொறும் பீலி சூட்டிய பிறங்குநிலை நடுகல்.’

என்றுரைக்குமாற்றானும்

993

நன்கு

விளங்கும்.

வ்வாறு

இறந்துபட்ட மறவர்க்குத் தவிர, அரசர் தம்பெயரும் பீடும் எழுதித் தமக்குங் கல்நாட்டின ரென்பது பழைய தமிழ் நூல்களில் யாம் ஆராய்ந்த பகுதிகளில் யாண்டுங் கண்டிலேம். ஒரு சாரார்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_22.pdf/310&oldid=1587863" இலிருந்து மீள்விக்கப்பட்டது