உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 22.pdf/311

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

278

மறைமலையம் 22

பழைய தமிழ்க் கல்வெட்டுகள் காணப்படாமை கொண்டு, முன்நாளிலிருந்த தமிழர்க்கு எழுத்து எழுதுதல் தெரியா தென்றும், வடக்கிருந்த பல்லவ அரசர்கள் தமிழ் நாட்டினுட் புகுந்தபிறகு தான் தமிழர் எழுதக் கற்றாரென்றுங் கூறாநிற்பர். தொல்காப்பிய எழுத்ததிகாரத் தொடக்கத்தில் தமிழெழுத்துக் களின் வடிவ வேறுபாடுகள் சொல்லப் பட்டிருத்தலானும். இவ்வாராய்ச்சிவல்ல ரிஸ்டேவிட்ஸ் என்னும் ஆங்கில அறிஞர் “இதுகாறும் பெற்ற சான்று களெல்லாம் இந்திய எழுத்துக்கள் ஆரியரால் வந்தன அல்ல என்றும், அவை தமிழ் வியாபாரிகளால் இந்தியாவினுட், கொணர்ந்து காணர்ந்து உய்க்கப்பட்ட ன என்றும் காட்டுகின்றன. எனக் கூறுதலானும், மேற்காட்டிய பழைய அகநாநூற்றுச் செய்யுள் கல்லிற் பெயரும் பீடும் எழுதும் பண்டைத் தமிழர் வழக்கத்தைத் தெளிவாக எடுத்துக்காட்டு தலானும் பழைய தமிழர்க்கு எழுத்து எழுதத் தெரியாதென் பாருரை பொருந்தாவுரையாமென்க. இதன் விரிவைப் ‘பண்ை காலத் தமிழர் ஆரியர்' என்னும் எமது நூலிற் காட்டியிருக் கின்றேம், ஆண்டுக் கண்டுகொள்க.

994

இமயமலை வரையிற் சென்று தமது வெற்றிக் கொடியை நாட்டிய இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்', கரிகாற் சோழன்', 'சேரன் செங்குட்டுவன்' என்னும் வேந்தரின் வரலாறுகளைப் பதிற்றுப்பத்து, பத்துப்பாட்டு, புறநானூறு, சிலப்பதிகாரம் முதலான பழந்தமிழ் நூல்களால் உணரப் பெறுகின்றனமே யல்லாமல், அவராற் செதுக்கி வைக்கப்பட்ட கல்வெட்டுகளை இதுகாறுங் காண்கிலேம். தலையாலங் கானத்து மாற்றரசர் எழுவரைப் பொருது தொலைத்த நெடுஞ்செழியனாலாவது, ஆரியரை வென்று துரத்திய நெடுஞ்செழியனாலாவது, ஆக்கப்பட்ட கல்வெட்டுகளையுங் காணேம். சிவபெரு மானுக்கும் திருமாலுக்குந் தமிழ்நாடெங்கும் பற்பல திருக் கோயில்கள் கட்டுவித்தவனென்று தேவாரத் தானுந் திருவாய் மொழியானுந் துணியப்படும். 'சோழன் கோச்செங் கண்ணானைப்' பற்றிய பழைய நூல்களால் ஏதும் அறிகின்றனமே யல்லாமல், அவன் வெட்டுவித்த கற்பட்டயம் ஒன்றாயினுங் காணோம்.

இவ்வாறு நான்காம் நூற்றாண்டிற்கு முற்பட்டிருந்த மாப்பேர் அரசர்களின் கல்வெட்டுகள் அறவே காணப்படாமை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_22.pdf/311&oldid=1587865" இலிருந்து மீள்விக்கப்பட்டது