உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 22.pdf/312

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

―

மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் 1

18

279

என்னையென்று ஆராயும்வழி, அதற்கு இரண்டு ஏதுக்கள் புலனாகின்றன. முதலாவது: அஞ்ஞான்றிருந்த சேர சோழ பாண்டியர் என்னுந் தமிழ்வேந்தர் மூவரும் தமக்குள் இடையிடையே போராடி நிற்பினும், பிற நாட்டரசர்க்கு ங்கொடாத ஒற்றுமையும் அதனாற் பெருகிய பேராற்றலும் நெடுங்காலம் வாய்க்கப்பெற்றிருந்தனர் என்பதேயாம். தமது அரசு வேற்றரசரால் வௌவப்பட்டு நிலைகுலைந்தழியும் எனக் கனவினும் அவர் நினைந்திலர். அதனாற், பல மாறுதல்கட் கிடையிலும் யிலும் நிலைத்து நிற்க வல்ல கற்பட்டயங்களை வெட்டுவித்திலர். இரண்டாவது பண்டைக்காலந் தொட்டே தமிழ்வேந்தர் மூவரும் செந்தமிழ்ப் பயிற்சியைப் பெரிதும் வளரச்செய்து, இங்ஙனங் கொடை கொடுத்தலும்

இயலுமோவெனக் கேட்டார் ஐயுற்று வியக்குமாறு தமிழ் கற்றார்க்கு மிகப் பெரிய பொருளுதவி செய்து தமிழையுந் தமிழரையுஞ் செழிப்புறப் பெருக்கிக், குடிகள் உவக்குமாறு செங்கோல் செலுத்திவந்தமையேயாம். இதனாற் கற்றார் தொகையும், அவரியற்றிய அளவிலா நூல்களும் 'பதிற்றுப் பத்து' முதலியவற்றைப்போல் அவ்வேந்தர்தம் பெயரும் பீடும் உரைத்து அவற்றை மங்காமற் றுலங்கவைத்தமையாலும் அவர் கல்வெட்டுகள் ஆக்கிவைக்குங் கருத்தே இலராயினார்.

சேரசோழ பாண்டியரென்னுந் தமிழ்வேந்தர் மூவரும் பண்டை நாளிற் பேராற்ற லுடையராய் விளங்கி, ஏனை நாட்டரசரால் வெல்லப்படாமலும், அவர்க்குக் கீழடங்கி வாழாமலும் தனியரசு நடாத்திவந்தன ரென்பதற்குத், தமிழ் நாடொழிய ாழிய இந்தியாவிலுள்ள ஏனை யெல்லா நாடுகளையும் வென்று தன் வெண்கொற்றக்குடை நீழற்கீழ் வைத்துச் செங்கோல் செலுத்திய மன்னர் மன்னனான பௌத்த

5

அசோகன் தான் கற்பாறைகளில் வெட்டுவித்த பதினான்கு கல்வெட்டுகளில் இரண்டாவது கல்வெட்டிலும் பதின் மூன்றாவது கல்வெட்டிலும் சேரசோழ பாண்டியர்களைக் குறிப்பிட்டு, அவர்கள் தனது அரசியல் நாட்டின் எல்லைக்கு எதிரே தெற்கின்கண் உள்ளவராகக் கூறியிருக்கின்றமையே சான்றாதல் காண்க. இவ் வசோகமன்னன் கிறித்து பிறப்பதற்கு முன் 269ஆம் ஆண்டில் அரச கட்டில் ஏறினவனாதலால். கி.மு. மூன்றாம் நூற்றாண்டிலேயே தமிழ் வேந்தர் மூவரு

6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_22.pdf/312&oldid=1587866" இலிருந்து மீள்விக்கப்பட்டது