உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 22.pdf/320

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

―

மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் 1

287

அக் கயவாகுவின் காலத்தவனான சேரன் செங்குட்டுவனும். அவனுக்கு உறவினனான நாகபட்டினத்துச் சோழன் கிள்ளிவளவனும் வடுகநாட்டில் அரசாண்ட சிவஸ்கந்தன் காலத்தவரென்பது சொல்லாமே யமையும், அமையவே, கிள்ளிவளவன் நாகநாட்டிற் சென்று மணந்து கொண்ட சிவஸ்கந்தன் மகளையேயாதல் வேண்டும். அம் மகள் வயிற்றிற் பிறந்தமைபற்றியே தொண்டைமான் இளந்திரையன் தன் தாயைப்பெற்ற பாட்டன் பெயராகிய சிவஸ்கந்தன்’ என்பதனோடு 'வர்மன்' என்பதுஞ் சேர்த்துச் 'சிவஸ்கந்த வர்மன்' எனப் பெயர் சூட்டப்பட்டானென்க. இலங்கைப் பௌத்த அரசரின் வரலாறு கூறும் ‘மகாவம்ஸத்’ தானும் மயிடவோலுப் பட்டயங்களானும் தனித்தனியே ஒரு காலத்தவராகத் துணியப்பட்ட முதற் கயவாகு. சேரன் செங்குட்டுவன் கிள்ளிவளவன், ஆந்திர சிவஸ்கந்தன் என்பவர்களெல்லாம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் பிற்பாதியி லிருந்தவர்களென்பது ஐயுறவின்றித் தெளியப்படு தலாற், கிள்ளிவளவன் மகனும் ஆரிய சிவஸ்கந்தன் பேரனும் ஆன தொண்டைமான் சிவஸ்கந்தவர்மன் கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் இறுதியில் இளவரசனாய்க் காஞ்சிமா நகரைத் தலைநகராய்க்கொண்டு தெற்கே பாலாறுமுதல் வடக்கே கிருஷ்ணையாறு வரையில் விரிந்துபரந்த நாட்டை அரசாண்டன னென்பதூஉம் மலைவின்றிப் பெறப்படும். இவன் அரசாளத் துவங்கிய காலந்தொட்டு இப் பெருநிலப்பரப்பு தொண்டைநாடு என்று பெயர்பெறலாயிற்று. இத் தொண்டைமான் கடல்வழியே வந்தவனாதலின் ‘திரையன் எனவும் பெயர்பெற்றான். இவன் வழியில் வந்த பல்லவர்கள் ‘பல்லவதிரையர்' என வழங்கப்பட்டனர்.3

அற்றேற், பீலிவளையின் மகனான இத் தொண்டைமான் இளந்திரையன் வந்த மரக்கலம் முழுகிப்போனதென 'மணிமேகலை' சொல்லியதே யல்லாமல், அவன் அதனோடு கடலில்

லில் மூழ்கி இறந்துபோகாமல் தப்பினானென்றேனும், அவனை அவன் றந்தை கிள்ளிவளவன் தேடிக்கொணர்ந்தா னென்றேனும் அது கூறிற்றிலதாலெனின்; அற்றன்று. அஃது,

66

"அங்கப் புதல்வன் வருஉ மல்லது பூங்கொடி வாராள் புலம்பல் இதுகேள்.”

994

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_22.pdf/320&oldid=1587876" இலிருந்து மீள்விக்கப்பட்டது