உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 22.pdf/319

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

286

8. கடைச்சங்கம்

இல்லையாய்ப் போன காலம்

இனிப், பழைய சங்கத்தமிழ் இலக்கியங்களிற் சொல்லப் பட்ட இவ் வரலாறு பழைய கல்வெட்டுகளாலும் நிலை பெறுத் தப்படுதலை ஒரு சிறிது காட்டுவாம். தொண்டை நாட்டின் தலைநகரான காஞ்சியில் ளவரசனாய் அரசு புரிந்த சிவஸ்கந்தவர்மன் என்பான். 'ஆந்திரபதம்' எனப்படும் வடுக நாட்டிலுள்ள 'விரிப்பரை' என்னும் ஊரை நன்கொடையாக வழங்கியதைக் குறிப்பிட்டுக் கிருஷ்ணையாற்றங் கரையை யடுத்துள்ள தன்னகடம் அல்லது அமராவதிநகர்க் கண்ணிருந்த தன் காவலாளர்க்கு ஒரு கட்டளை விடுத்தனன். இங்ஙனம் அவன் விடுத்த கட்டளையானது பொறிக்கப்பட் பொறிக்கப்பட்டபட்டயங்கள் குண்டூர்க் கூற்றத்தின்கண் உள்ள 'மயிடவோலு' என்னும் ஊரில் அகப்பட்டன. அப் பட்டயங்களை ஆராய்ந்து பார்க்க, அக்கட்டளை பிறப்பித்த சிவஸ்கந்தவர்மன் காஞ்சி நகரத்தில் அரசாண்டவன் என்றும், பல்லவர் குடியையும் பாரத்துவாச கோத்திரத்தையுஞ் சேர்ந்தவனென்றும் அவைகளில் வரையப் பட்டிருந்தன. இவன்றன் காவலாளர் அமராவதியில் இருந்தன ரென்பதனால், இவன் அரசு செலுத்திய தொண்டை நாட்டின் எல்லை, வடக்கே கிருஷ்ணையாறு ஓடும் வடுகநாடு வரையில் இருந்தமை நன்கு பெறப்படும்.

தெலுங்காணத்தை (வடுகநாட்டை) அரசாண்ட ஆந்திர பிருத்திய அரசரில் மிகச் சிறந்தவனாகிய இரண்டாம் புளுமாயி என்னும் மன்னவன் புதல்வனான சிவஸ்கந்தன் என்பான் கி.பி. 177 ஆம் ஆண்டு முதல் 184 ஆம் ஆண்டு வரையில் அரசாண் டனன்.' இப்போது திரும்ப ஆராய்ந்து கணக்குச் செய்யப் பட்டபடி இலங்கையில் அரசாண்ட முதற்கயவாகுவின் காலம் கி.பி.171 முதல் 193 வரையிலென்று துணியப் பட்டிருத்தலால்2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_22.pdf/319&oldid=1587875" இலிருந்து மீள்விக்கப்பட்டது