உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 22.pdf/322

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

―

  • மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் 1

289

7

என்று அகப்பாட்டினுள்ளுங் கூறப்படுதலின் இதனையை யுறுதற்கு இடஞ் சிறிதும் இன்றாதல் காண்க. இன்னும் பௌத்த அசோக மன்னன் காலத்து மோரியர் தமிழ்நாட்டின்மேற் படையெடுத்து வந்தும், சேரசோழ பாண்டியர்களை வெல்ல மாட்டாதவர் களாய்த் திரும்பி விட்டமையும் பிறவுமாகிய இவ்வுண்மை களெல்லாம் வரலாற்று நூற் புலமையினரான திருவாளர் கிருஷ்ண சுவாமி ஐயங்கார் அவர்களால் தாம் எழுதிய ஆங்கில நூல்களில் நன்கெடுத்துக் காட்டப்பட் டிருக்கின்றன. சோழ வேந்தர்களின் ஆட்சி வடுகநாடு வரையிற் பரவியிருந் தமையாலும். அக்காலத்துச் சோழர்கள் பேராற்றலுடைய வர்களாயிருந்தமையாலும், முதலில் அவர்களை வென்று கொண்டு தமிழ்நாட்டினுட்புகுவது வட ஆரியர்க்கும் வடுகர்க்கும் முற்றும் ஏலாததா யிருந்தது. பின்னர் இளந்திரையன் காலந்தொட்டே வடுகர் தமிழ்நாட்டிற் றொகுதி தொகுதியாய் வந்து சேரலாயினர்.

8

காவிரிப்பூம்பட்டினம் கடல்வாய்ப்பட்டபின் சோழ மன்னர் ஆற்றலும் வரவரச் சுருங்கலாயிற்று. நன்கு ஆராய்ந்து பாராது கோவலனை நடுவின்றிக் கொல்வித்ததனானே, கற்பிற் சிறந்த அவன்றன் மனைவி கண்ணகி கொண்ட பெருஞ்சீற்றத் தாற் பாண்டிய மன்னனும் உயிர் துறந்தான். இவனுக்குப்பின் வந்த வெற்றிவேற் செழியன் கோவலனைக் கொல்வித்தமைக்கு ஏதுா யிருந்தவன் ஒரு பொற்கொல்லன் என்பதுபற்றிப் பொற் கொல்லர் அனைவர்மேலும் பெருஞ்சினங்கொண்டு அவர் களுள் ஆயிரவரைக் கொன்று கண்ணகியின் ஆவிக்குப் பலிகொடுத்தானென்று சிலப்பதிகாரங் கூறாநிற்கின்றது இவன் காலத்திற் பாண்டி நாட்டில் மழையில்லையாகி வற்கடந் தோன்றி மன்னுயிர்கள் மடிந்தன. இப்பாண்டியனும் இறந்துபட இவனுக்குப்பின் உக்கிரப்பெருவழுதி பட்டத்திற்கு வந்தானாகல் வேண்டும். இவ்வுக்கிரப் பெருவழுதியோடு கடைச்சங்கம் முடிவுபெற்றதென்று 'இறையனாரகப் பொருள்' முகவுரை கூறுகின்றது. வெற்றிவேற் செழியன் ஆட்சிக்கு இருபது ஆண்டும் உக்கிரப்பெருவழுதியின் ஆட்சிக்கு இருபது ஆண்டும் வைத்து இலங்கைக் கயவாகுமன்னன் ஆட்சிக்காலத்தின் டையதாகிய கி.பி.180 ஆம் ஆண்டிலிருந்து கணக்குச்செய்ய உக்கிரப் பெருவழுதியும் கடைச்சங்கமும் இல்லையாய்ப் போன

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_22.pdf/322&oldid=1587879" இலிருந்து மீள்விக்கப்பட்டது