உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 22.pdf/323

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

290

மறைமலையம் - 22

காலங் கி.பி. 220 ஆம் ஆண்டென்று முடிவு கட்டப்படும் உக்கிரப் பெருவழுதிக்குப்பின் வந்த பாண்டியர் இன்னாரென்று தெரிந்து தொடர்புபடுத்துதற்குத் தக்கசான்று மிகுதியுங் கண்டிலேம்.

ஆயினும் நம்பியார் திருவிளையாடல் கூறுவது கொண்டு இவற்குப்பின் வந்தோன் கல்வெட்டுகளுக்கு முற்பட்ட வரகுண பாண்டியனா யிருக்கலாமென்று உய்த் துணர்தல் இழுக்காது. நம்பியார் திருவிளையாடலிற் சொல்லப்பட்ட வரகுண பாண்டியன் சிவபிரான் திருவடிக்கட் பேரன்பு பூண்டவன். இவன் ஒருகால் ஊர்காவலர் பிடித்துக்கொணர்ந்த கள்வன் ஒருவன் உடம்பெங்குந் திருநீறு அணிந்திருக்கக் கண்டு 'இவர் சிவனடியார். இவரை விடுதலைசெய்ம்மின்!' என விடுவித்து விட்டான்; பின்னர் ஒருகால் ஓடும் நரிகள் ஊளையிட்ட ஒலி சிவபிரான் பெயரைக் கூவுவதுபோல் தன்செவியிற்பட அவை குளிரால் வருந்தாமைப் பொருட்டு அவற்றின்மேற் போர்வை களை வீசினன்; மற்றொருகால், குளத்திலுள்ள தவளைகள் அரற்றிய ஓசைகேட்டு அவை சிவபிரானைப் பாடினவெனக் கருதி அவற்றிற்குப் பரிசிலாகப் பொற்காசுகளை எறிந்தனன்; வேறொருகால், ஒருவன் திருக்கோயிலில் இருந்த எள்ளைத் தின்னக் கண்டு அவனைப் பிடித்து. ஏன் இங்ஙனஞ் செய்கின்றாய்? என்று வினவ, அவன் திரும்பவும் பிறவியெடுத்து இத் திருக்கோயிற் றொண்டு செய்தற்கு' என்று விடைகூற, அற்றேல் எனக்கும் இத்தகைய பிறவி வருக!' என்று அக் கள்வன் வாயிலுள்ள எள்ளை இடித்தெடுத்து அவ் வெச்சிலைத் தானும் நுகர்ந்தனன்; பின்னும் ஒருகால் திருவிடை மருதூர்க்கோயிலின் சுற்றில் ஒருபுறத்துத் தனியே கிடந்த ஒரு மண்டையோட்டைக் கண்டு கீழ்விழுந்து வணங்கி 'உம்மைப் போல எமது இத் தலையும் இவ்விடத்தே கிடத்தல் வேண்டும்' என்று கூறி அடுத்தடுத்து இரந்து கேட்டனன்; மற்றும் ஒருகால் திருக்கோயிலின் முற்றத்தே கிடந்த நாயின் மலத்தைக் கண்டு 'இஃது இங்கே கிடக்கப்பெற்றதே,' எனக் கொண்டாடி அதனைத் தானேயெடுத்து அப்புறப்படுத்தினன்; இன்னும் ஒருகால் காம்பினின்றும் உதிர்ந்த வேப்பங் கனிகளைக் கண்டு சிவலிங்க வடிவினவாயிருத்தல்பற்றி அவற்றிற்குப் பட்டாடைகளை மேலே வெயில் மறைப்பாகக்

அவையெல்லாஞ்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_22.pdf/323&oldid=1587880" இலிருந்து மீள்விக்கப்பட்டது