உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 22.pdf/325

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

292

  • மறைமலையம் 22

இவ்வாறு ஒரு பார்ப்பனனது இறுதிக்குத் தான் ஓர் ஏதுவாயிருந்ததும், எதிர்த்துவந்த சோழனொடு தான் போர்புரியுங் கால் தன் படையிலுள்ள மறவரும் பகைவன் படையிலுள்ள மறவரும் மடிந்துபட அதற்குத் தான் அரசனாயிருந்தமையே ஓர் ஏதுவானதும் நினைந்துநினைந்து இறைவன்மாட்டு அன்பின் முதிர்ந்த இம் ம் மன்னவன் ஆற்றானாயினான் என்று கொள்வதே பொருத்தமாம். ஏனெனிற் சோழனொடு போர்புரிந்தபின் இவன் அரச வாழ்க்கையைத் துறந்து, சிவபிரான் திருக்கோயில்கடே றும் வணங்கிச் செல்கையில், திருவிடை மருதூர்த் திருக் கோயிலினுட் புகுதலும், இவனை உருவுகொண்டு வருத்திய பழிதொலையப், பின்னர் இவன் திருக்கைலாயத்தை இறைவனருளாற் கண்டு வணங்கி இவ் வுலகவாழ்வு நீத்தமையா லென்க. இவன் அரசுபூண்ட சிறிது காலத்திலெல்லாம், அதன்பால் உவர்ப்புத் தோன்றி, அவ் வரசுரிமையைத் தன் மகனுக்கோ அல்லது தன்னுடன் பிறந்தானொருவனுக்கோ கொடுத்துத் தான் திருக்கோயில் வழிபாட்டிற் சென்றானாதல் வேண்டும்.

பப

இவ் வரகுண பாண்டியனுக்குப்பின் வந்த மற்றொரு பாண்டிய மன்னனிடத்தேதான் மாணிக்கவாசகப் பெருமான் முதலில் அமைச்சரா யிருந்தாராகல் வேண்டும். மற்றுத் தமிழ்வரலாறு'உடையாரோ, மேற்கூறிய வரகுணபாண்டி யனிடத்திற்றான் திருவாதவூரடிகள் அமைச்சராயிருந்தனர் போலும் என்கின்றார். மேற்காட்டியவாற்றால் வரகுண பாண்டியன் சிவபிரான்மாட்டு எல்லையற்றதோர் அன்புடைய னென்பது தெற்றென விளங்குதலால், மாணிக்கவாசகர் தாம் குதிரை வாங்குதற்கு எடுத்துச்சென்ற பொருளைச் சிவத் தாண்டிற் செலவழித்தமை பற்றி அவனாயிற் சிறிதும் வெகுண்டிரான்; அவரை பேரன்பின் றிறத்தைக் கண்டு தன்னரசுரிமைச் செல்வமெல்லாம் அவரது திருவடிக்கே வைத்திருப்பான். மற்று, அவரை அமைச்சராக்கொண்ட பாண்டியனோ அவர் சிவத்தொண்டிற் செலவிட்ட பொருளை யெல்லாந் தரும்படி அவரைச் சிறையிலிட்டுத் தொடர்பாகப் பெரிதுந் துன்புறுத்தினவன்; ஆதலால், திருவாதவூரடிகள் அமைச்சராயிருந்தது, வரகுண பாண்டியனிடத்தன்றி அவற்குப் பின் அரசுக்கு வந்த மற்றொரு பாண்டியனிடத்தே யாமென்பது ஒரு தலை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_22.pdf/325&oldid=1587882" இலிருந்து மீள்விக்கப்பட்டது