உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 22.pdf/326

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* மாணிக்கவாசகர் வரலாறும் காலமும்

293

அவ்வாறாயினும் மாணிக்கவாசகப் பெருமான் அமைச்சுரி மையைக் கைவிட்டுத் தில்லையில் வந்து வைகித் 'திருச்சிற்றம் பலக் கோவையார்' அருளிச்செய்தகாலத்து, அவ் வரகுண பாண்டியனும் அவர்க்கு முன்னமே தில்லைக்கண்வந்து வைகி அம்பலக்கூத்தனை வணங்கியபடியாய், இருந்தன னென்பது புலனாகா நிற்கின்றது. என்னையெனின், தமது திருச்சிற்றம்பலக் கோவையாரில் “வரகுணனைத், தென்னவன் ஏத்து திருச்சிற்றம் பலத்தான்” (306ஆவது செய்யுள்) எனவும். “சிற்றம்பலம் புகழும், மயலோங்கிருங்களியானை வரகுணன் (327வது செய்யுள்) எனவும் இரண்டிடத்தில் ‘ஏத்து’, 'புகழும்' என அடிகள் நிகழ்காலவினைச் சொற்களாற் கூறுதலினென்க. தம்மோடு உடனிருந்தமையாலன்றோ, அவ் வரகுணதேவரின் பேரன்பைக் கண்டு வியந்து அடிகளும் அவரை அங்ஙனம் பாராட்டி அருளிச் செய்வாராயினர். தாம் அமைச்சரா யிருந்தபோது நரிகளைப் பரியாக்கி ஒரு பேரெழிற் பரிமேல் வந்த சிவபெருமானைத் தம் அரசனாகிய பாண்டியனுந் தெரிந்திலன் என்பது புலப்பட,

“ஈண்டிய மாயா இருள்கெட எப்பொருளும் விளங்கத் தூண்டிய சோதியை மீனவனுஞ் சொல்லவல்லன் அலன்

என்று அடிகளே அருளிச்செய்திருத்தலின், இவர் அமைச்சரா யிருந்தபோது அரசாண்டவன் வரகுண பாண்டியன் அல்ல னென்பது திண்ணமாம் வரகுண பாண்டியனாயிற் பரிமேல்வந்த இறைவனைத் தெரியாதிரான். இதனை ‘மாணிக்கவாசகர் வரலாற்’றினுள்ளும் எடுத்துக்ககாட்டினாம்.!° அதுநிற்க.

இனி, மாணிக்கவாசகரானும், நம்பியார் திருவிளை யாடலானுங் கூறப்பட்ட வரகுண பாண்டியன், கி.பி. நான்காம் நூற்றாண்டுக்குப் பிற்பட்ட கல்வெட்டுகளிற் குறிப்பிடப்படும் வரகுணபாண்டியர் இருவரிற் சேர்ந்தவன் அல்லனென்பதை ளக்குவாம். கல்வெட்டுகளாற் கட்டப்பட்ட அவ் விருவரில் முற்பட்டவனான வரகுணபாண்டியன் ஓயாமற் படை யெடுத்துச் சென்று வேற்றரசர் நாடுகளைக் கவர்ந்து கொண்டு அவர்கட்குப் பெருந் துன்பத்தை விளைத்தவன்; தன் காலத்திற் சோழ நாட்டையும், தொண்டை நாட்டின் தென்பகுதி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_22.pdf/326&oldid=1587884" இலிருந்து மீள்விக்கப்பட்டது