உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 22.pdf/327

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

294

  • மறைமலையம் 22

களாயிருந்த தஞ்சை திருச்சிராப்பள்ளி மாகாணங்களையும் தன் மதுரை நாட்டோடு சேர்த்துக் கொண்டவன்; கி.பி.779 முதல் 830 வரையில் தொண்டை மண்டலத்தை அரசாண்ட 'தண்டி வர்மன்' என்னும் பல்லவ அரசன் காலத்தில் இவ் வரகுண பாண்டியன் காவிரியாற்றங் கரையில் வந்து அவ்வரசன் ஆட்சிக் கீழ் இருந்த தொண்டை நாட்டின் தென்பாதியைக் கைப்பற்றிக் கொண்டான்; இவனுக்கு ‘மாறன் சடையன்' என்னும் பெயரும் உண்டு. இவன் சிவபிரானிடத்தும் அவனடியாரிடத்தும் அன்புள்ளவன் என்பதற்கு ஏதொரு குறிப்பும் இவன் காலத்துக் கல்வெட்டுகளில் அகப்படவில்லை. அதனால், திருவாதவூரடி களாலும், நம்பியார் திருவிளையாடலாலுஞ் சுட்டப்பட்ட வரகுண பாண்டியன் என்பது தெற்றென

11

இவனல்லன்

விளங்கும்.

இனி,

இம்மாறன்

சடையன்

6

ன்

என்னும்

12

வரகுண பாண்டியனுக்குப் பேரனாகக் கொள்ளப்படும் மற்றொரு வரகுண பாண்டியன் பட்டத்துக்கு வந்தகாலம் கி.பி. 862க்கும் 863க்கும் இடையிலாகும். யிலாகும். இவன் காலத்திற் றொண்டை மண்டலத்தை ஆண்ட அரசன் அபராஜித பல்லவனானவன். இவ் இரண்டாம் வரகுணனும் எந்நேரமும் பகைமேற் சென்று போர்புரிதலையே தொழிலாக் கொண்டவன். இவன் இத் தன்மையானதலை, இவன் காலத்திற் செதுக்கப்பட்டதும் திருச்சிராப்பள்ளி மலையின் மேலைக்குகையிற் கண்டெடுக்கப் பட்டதுமான ஒரு கல்வெட்டுப் பட்டயமுஞ் சான்று பகர்கின்றது. அஃதெங்ஙன மாயினும் ஆகுக. பாட்டனான வரகுணன் சோழன் நாட்டைக் கைப்பற்றிக் காண் மையால், இவனை இவனை எதிர்ப்பவர் சோழநாட்டில் எவருமே இலர். ஆகவே, இவ் வரகுணன் தொண்டை நாட்டைக் கைப்பற்றுதற்காகவும், அதற்கும் மேற்கே கங்கா பல்லவர் ஆண்ட நாடுகளைக் கைப்பற்றுவதற்காகவும் அடுத்தடுத்துப் படைமேற் கொண்டு சென்றானென்பது கல்வெட்டுகளின் ஆராய்ச்சியால் நன்கு புலனாகின்றது.

13

இவன்

கி.பி. 846 முதல் 866 வரையிற் சென்ற காலத்துட் பாண்டியன் ஒருவன் இலங்கைமேற் படையெடுத்து வந்தன னென்று இலங்கைப் பெளத்த வமிசாவளியாகிய 'மகாவமிசம் கூறுமதுவும்,14 இவ் வரகுண பாண்டியன் காலத்ததாகப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_22.pdf/327&oldid=1587885" இலிருந்து மீள்விக்கப்பட்டது