உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 22.pdf/339

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

306

மறைமலையம் - 22

பல்லவனை'யும் அவனுக்குத் துணையாய் வந்த மேலைக் கங்கா அரசனான முதலாம் பிருதிபிதியையும் எதிர்த்தவன் என்பதனை மேலெடுத்துக் காட்டினாம்.1 அங்ஙனம் அவன் அவ்விருவரை எதிர்த்ததும் அவர், தனது மதுரைநாட்டிற்மேற் படையெடுத்து வந்தமையாலன்று; வனே அவர்களுடைய நாடுகளைக் கைப்பற்றுதற் பொருட்டு அவர்மேல் வலியச் சென்றவன் ஆவன். கல்வெட்டுகளுக்கு முற்பட்ட பழைய வரகுணபாண்டியன் அங்ஙனம், வலிந்து எவர்மேலும் போர்க்குச் சென்றவன் அல்லன்; வலிய வந்தெதிர்த்த சோழனையும் இறைவனருட்டு ணையால் வென்று ஓட்டினவன். மற்றுக் கல்வெட்டுகளிற் காணப்படும் இரண்டாம் வரகுணனோ வலியப் படையெடுத்துச் சென்று சன்று அபராஜித அபராஜித பல்லவ வேந்தனோடும் அவற்குத் துணையாய்வந்த மேலைக் கங்கா பிருதிவிபதியோடும் கும்பகோணத்திற்கு அருகிலுள்ள திருப்புறம்பயம் என்னும் இடத்திற் போர்புரிந்து அவரால் தோல்விபெற்றுச் சென்றவன். உண்மை இங்ஙனமிருக்கத், 'தமிழ் வரலாறு’ உடையார் மூன்றாம் நூற்றாண்டிலிருந்த பழைய வரகுணனையும், ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலிருந்த வரகுணனையும் ஒன்றுபடுத்துதற்கு முனைந்த தமது கருத்து நிறைவேறுதற் பொருட்டுக் திருப்புறம்பயத்திற் போர்புரிந்த இந்தவரகுண பாண்டி யன் அபராஜிதனைக் கொன்று வெற்றிபெற்றான் என்று ஒரு முழுப் பொய்யுரையுங் கட்டி, உண்மையைத் திரித்துச் சொன்னார் தாம் பிழையாகப் பிடித்த தான்றனை நாட்டிவிட வேண்டினாற் பொய்யும் புளுகும் மேன்மேற் சொல்லநேரும் என்பதற்குத் தமிழ்வரலாறு உடையார் ஓர் எடுத்துக்காட்டாயினார் கண்டீர்! பழைய வரகுணன் தன்னை வந்தெதிர்த்த சோழமன்னனை வென்று துரத்தினன் என்று திருவிளையாடற் புராணங் கூறுதலிற், கல்வெட்டுகளிற் காணப்படும் இரண்டாம் வரகுணனும் அங்ஙனமே வெற்றி பெற்றானென்று காட்டினாவல்லாமல் அவ் விருவரையும் ஒருவராக்குதற்கு முனைந்த தமது கருத்து நிரம்பாதெனக் கண்டே 'தமிழ்வரலாறு' உடையார், பிற்பட்ட வரகுணனும் வெற்றிபெற்றானென்று தாமாகவே பொய்யைப் படைத்து மொழிந்தார். இப் பிற்கால வரகுணன் வெற்றிபெற்றானென்றும் அவர் கூற்றுப் பொய்யாதலை விளக்கிக் காட்டுதும்:

ஒரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_22.pdf/339&oldid=1587904" இலிருந்து மீள்விக்கப்பட்டது