உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 22.pdf/338

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் - 1

305

வெட்டுவித்த கல்வெட்டு ஒன்றில் அவ்விருவரும் இருவேறு வகை யினராகவே ஓதப்படுதலால், இஃதறியாது களப்பிரரை யுங் கலசூரியரையும் ஒருவரேயென்ற 'தமிழ்வரலாறு' உடையார் கூற்றுப் போலியேயாம் என்க. மேலும், கலசூரியர் என்போர் வடக்கே யமுனை யாற்றினையும் தெற்கே நருமதை யாற்றினையும் எல்லைகளாக உடைய சேதிநாட்டின் ஒரு ய பகுதியை அரசாண்ட ஓர் இனத்தார் ஆவர்." இவ் வினத் தவனான விச்சல மன்னன் கி.பி. 1162ஆம் ஆண்டிலிருந்து 1167 ஆம் ஆண்டுவரையிற் கல்யாண நகரில் அரசாண்டனன்.27 ங்ஙனம் வடநாட்டளவில் ஒடுங்கிப்போன கலசூரியர் தன்னாட்டில் வந்தனரென்பதற்கும், அவரே களப்பிரர் அல்லது, ஆந்திரவடுகர் அல்லது நாகர், பல்லவர் என்பதற்கும் ஏதொரு சான்றும் இதுகாறுங் கிடைத்திலாமையின் 'தமிழ்வரலாறு' உடையார் கூற்று ஒரு சிறிதும் ஏற்றுக்கோடற் பாலது அன்று என மறுக்க.

இனித், தொண்டைமான் இளந்திரையன் தெற்கேயிருந்த சோழமன்னற்கும், வடுகநாட்டிலிருந்த ஒரு நாகமன்னன் புதல்விக்கும் புதல்வனாய்ப் பிறந்து தெற்கே பாலாறு முதல் வடக்கே கிருஷ்ணையாறு வரையும் விரிந்த தொண்டை நாட்டை ஆளப் புகுந்த நாள் முதல் வடுகக் கருநாடர் தொகுதி தொகுதியாய்த் தமிழ்நாட்டின் கண் வந்து குடியேறப்பெற்றா ராயினும் கி.பி. ஆறாம் நூற்றாண்டு முதல் வடுக நாட்டை யாண்ட சாளுக்கிய அரசர்க்கும் தொண்டை நாட்டின் தலைநகரான காஞ்சியில் அரசு புரிந்த பல்லவ வேந்தர்க்கும் ஓயாப் போர் நிகழ்ந்துவந்தமையால், அதுமுதல் வடுகக் கருநாடர் தமிழ் நாட்டிற்கு வருதலும் ஓய்ந்தது. ஆகவே, கல்வெட்டுகளிற் காணப்படும் வரகுண பாண்டியர் இருவர் காலத்தும் வடுகக் கருநாடர் தமிழ்நாட்டிற்குள் வந்தது மில்லை. வந்து அப் பாண்டியரோடு போர்புரிந்தது மில்லை; அவர் வந்ததெல்லாம் கல்வெட்டுகள் உண்டாதற்கு முற்பட்ட காலத்திலேயா மென்பதூஉம், அங்ஙனம் வந்து அவர் எதிர்த்தது பழைய வரகுண பாண்டியன் மகனையும் பேரனையுமேயா மென்பதூஉம் பகுத்தறியற் பாலன. கல்வெட்டுகளிற் காணப்படும் இரண்டாம் வரகுணனோ தன் காலத்தே தொண்டை நாட்டை அரசாண்ட ‘அபராஜித

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_22.pdf/338&oldid=1587901" இலிருந்து மீள்விக்கப்பட்டது