உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 22.pdf/337

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

304

மறைமலையம் 22

23

நண்பராக்கிக் கொண்ட அரசர்களுட் 'களம்பிரர்’ அல்லது 'களப்பிரரும்' ஒருவராகச் சொல்லப்படுகின்றார். இனி, னி, இவ் விநயாதித்தியனுக்குப் பேரனான, 'இரண்டாம் விக்கிர மாதித்தியன்' கி.பி.733ஆம் ஆண்டிற் பட்டத்திற்கு வந்தவுடன் பல்லவ அரசர்க்குத் தலைநகராகிய 'காஞ்சி' மேற் படை யெடுத்து வந்து, அப்போது அதன்கண் அரசாண்ட “நந்திப் போத்தவர்மனை' வென்று அவனுடைய செல்வங்களை யெல்லாங் கவர்ந்தனனென்றும், அதன்பிற் சேர சோழ பாண்டியர்களையும் களப்பிரரையும் எதிர்த்து அவருடைய ய வலிமையைக் குறைத்தனன் என்றுந் தக்கணநாட்டு வரலாறு கூறுகின்றது.24 ஆக, ஆறாம் நூற்றாண்டிற்கு முன்னரே களப்பிரர்' என்னும் வடுகக் கருநாடர் தமிழ்நாட்டிற் புகுந்து நிலைபெற்றுத் தமிழ் அரசருள் ஒருவராகக் கருதப்பட்டமை இவற்றால் நன்கு விளங்காநிற்கும். தமிழ்நாட்டிற்குப் புறத்தேயிருந்து வந்த இக் களப்பிரர் இதன்கண் நிலைபெற்றுத் தமிழரசர்களுள் ஒருவராகக் கருதப்படுதற்கு இரண்டு மூன்று நூற்றாண்டுகளாவது சென்றிருக்க வேண்டுமாதலால், இவர்கள் மூன்றாம் நூற்றாண்டின் இறுதியில் இங்கு வந்தாரென்ப து சாலப்பொருத்தமேயாம் என்க.

இனி, ஆறாம் நூற்றாண்டிற்கு முன்னரே தமிழ்நாட்டில் நிலைபெற்ற இக் களப்பிரரைத், 'தமிழ்வரலாறு' உடையார் ஏதொரு சான்றுங் காட்டாமற், கலபூரியர் அல்லது கலசூரியர் என்பாரோடு ஒன்றுபடுத்திக், கலபூரியர் என்னுஞ் சொல்லே களப்பிரர் எனச் சிதைந்த தென்று தமக்குத் தோன்றியவாறே கூறினார். கலபூரியரே களப்பிரராவர் என்பதற்குச் சான்று என்னை? ஏதொரு தொடர்புங் காட்டாமற் றமக்குத் தோன்றிய வாறு எழுதுதல்தான் ஆராய்ச்சியின் வந்த வரலாறு போலும்! மேற்சொல்லிய 'விநயாதித்திய'னால் அடக்கிக் கீழ்ப்படுத்தப் பட்ட மன்னர்களுட் 'களப்பிரரே’யன்றி ஹைஹயரும்’ ஒருவராகச் சொல்லப்படுகின்றனர்; இந்த ஹைஹயரே கலசூரியர்' ஆவரென வடமொழி ஆங்கிலமொழி முதலிய வற்றில் மாபெரும் புலவராய் வயங்கிய இராமகிருஷ்ண கோபால பண்டாரகர் கூறினார்.25

களப்பிரரும், கலசூரியரும் ஒருவரேயானால் அவரை இருவேறு மன்னராக ஓதுதல் வேண்டா மற்று, விநயாதித்தியன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_22.pdf/337&oldid=1587899" இலிருந்து மீள்விக்கப்பட்டது