உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 22.pdf/336

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் - 1

கி.மு.

303

கருநாடர் பெரும்பாலுஞ் சமணமதத்தினரா யிருந்தமையால், அவர் தமிழ்நாட்டிற் புகுந்தபின் அதனை மிகவும் வளர்த்து ஓங்கச் செய்வாராயினர். தக்கணத்தினும், தென்றமிழ் நாட்டினும் சமணமதம் க நான்காம் நூற்றாண்டு முதலேயிருந்ததாகலின், தன்னை வளர்ப்பவரான வடுகக் கருநாடர் வந்தபின் கி.பி. மூன்றாம் நூற்றாண்டு துவங்கி அது பெருக்க முறுவதாயிற்று என்க. அஃதொக்கும், மேலே காட்டிய அரசரின் ஆட்சிக்காலத்தைக் கணக்கிடுகின்றுழி, ஒருகால் ஒவ்வொருவர்க்கு முப்பது ஆண்டு விழுக்காடும். பிறிதொருகால் இருபதாண்டு விழுக்காடும் வைத்துக் கணக்கிட்ட தென்னை யெனின்; தமது ஆட்சிக் காலத்தில் வறுமையும் நோயுந் துன்பமும் தோல்வியும் நிகழப் பெற்ற அரசரது ஆட்சி ஒவ்வொன்றுக்கு இருபது ஆண்டும், வறுமையுந் நோயுந் துன்பமுந் தோல்வியும் இல்லாத அரசரது ஆட்சி ஒவ்வொன்றுக்கு முப்பது ஆண்டுங் கூறுதல் பொருத்தமேயாம்; என்னை? துன்பமுங் கவலையும் உடையார்க்கு ஆண்டு குறுகுதலும், அவை இல்லார்க்கு அது நீளுதலும் எல்லார்க்கும் ன்பாடாகலின் என்க. அதுகிடக்க.

6

னி, மேற்காட்டியவாறு கி.பி. மூன்றாம் நூற்றாண்டில் தென்னாடு புகுந்து பாண்டியனது அரசை வௌவிய வடுகக் கருநாடரில் ஒரு சாராரே அக் காலத்திற் 'களப்பிரர்’ எனப் பெயர் பெற்றமையாற் போலும். வேள்விக் குடிப் பட்டயத்தின் தமிழ்ப் பகுதியில் அவர் அப்பெயராற் குறிப்பிடப்படுவாரா யினர். இப்போது ‘பாதாமி' என வழங்கும் பழைய ‘வாதாவி’ நகரைச் சிறுத்தொண்டை நாயனாராகிய தன் படைத் தலைவரைக் கொண்டு தகளாக்கி, அதன்கண் அரசாண்ட பேரரசனான இரண்டாம் புலி கேசனை வெற்றிகண்ட முதலாம் நரசிங்கவர்மவேந்தனால் தோல்வியுற்றோருட் களப்பிரரையும் ஒருவராகக் கூறுகின்றன கூரத்துப் பட்டயங்கள். சாளுக்கியர் போராடிவந்த அரசர்களுட் களப்பிரரும் ஒருவரெனக் கேந்தூர்ப் பட்டயங்கள் புகலுகின்றன.

22

21

மேற்சொன்ன இரண்டாம் புலிகேசனுக்குப் பேரனும் கி.பி.680ஆம் ஆண்டிற் பட்டத்திற்கு வந்தவனுமான ‘விநயாதித் தியன்' தான் அரசுக்கு வந்தபின், பதினோராம் ஆண்டிற்கும் பதினான்காம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலத்திற், றனக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_22.pdf/336&oldid=1587898" இலிருந்து மீள்விக்கப்பட்டது