உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 22.pdf/335

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

302

மறைமலையம் - 22

பாண்டியன் மைந்தனோடு வந்து போர்புரிந்த சோழமன்னற்கு வடுகக் கருநாடர் துணையாகப் போந்து தோற்றுப் போனமையும். அதன்பின் வரகுண பாண்டியற்கும் பேரனாகக் கொள்ளத்தக்க பாண்டியன் காலத்திற் கருநாடர்வேந்தன் தானே போந்து அவனது அரசுரிமையினை வௌவினமையும் மேற்காட்டின மாகலின், உக்கிரப் பெருவழுதிக்குப்பின் வந்தவனாக மேற் காட்டிய ஆராய்ச்சியாற் பெறப்படும் வரகுண பாண்டியனுக்கு ஓர் இருபஃதாண்டும், அவன் மைந்தற்கு ஓர் இருபஃதாண்டும். அவன்றன் பேரற்கு ஓர் இருபஃதாண்டுமாகக் கூட்டிப் பெற்ற அறுபஃதாண்டுகளை, உக்கிரப் பெருவழுதியின் இறுதிக் காலமாகிய கி.பி. 220ஆம் ஆண்டொடு கூட்டிக் கணக்குச் செய்யக் கி.பி. 280 ஆம் ஆண்டில் அஃதாவது, கி.பி. மூன்றாம் நூற்றாண்டின் இறுதியில் வடுகக் கருநாடர் மன்னன் பாண்டி வேந்தனது அரசைக் கைப்பற்றினானாதல் வேண்டு மெனக் கொள்க.

அதுவேயுமன்றி, அங்ஙனம் வந்த கருநாடர்மன்னன் சமண மதந் தழுவிச் சிவபிரான் றிருக்கோயிற் பணிகளை அடைப்பித்து விட்டானென்று மேற்காட்டிய கல்லாடச் செய்யுள் நுவலு தலின், அஞ்ஞான்று சமணமதந் தலை நிமிர்ந்து நிற்கப் புகுந்த மையும் விளங்கும். அஞ்ஞான்று தான் சமணங் கிளர்ச்சிபெற்று எழுந்த தென்றமையால், அதற்குமுன் கிளர்ச்சிபெற்று நிலவிய புத்தமதம் அப்போதுதான் அக் கிளர்ச்சி குன்றி ஒடுங்கி விட்டமையும் விளங்கா நிற்கும். இவ்வாறு, பௌத்தமதம் ஒளி குன்றி மங்குதற்கும், சமணமதம் ஒளிதுன்றிப் பொங்குதற்கும் உரியகாலம் கி.பி. மூன்றாம் நூற்றாண்டேயாம். தில்லையம் பலத்தே மாணிக்கவாசகப் பெருமானொடு வழக்காடித் தோற்றபின் பௌத்தமதம் முற்றுந் தன் கிளர்ச்சி குன்றிப் போயிற்று; அதற்குப் பின்னர்தான் சமணமதம் நிலவத் துவங்கிற்று. வடுகக் கருநாடர் தமிழ் நாட்டிற் புகு முன்னம் சமணமதம் இங்குளதாயினும். அவர் இங்குவந்த பின்னரேதான் அது பெரிதுங் கிளர்ச்சிபெற்று ஓங்கலாயிற்று. வடக்கே தக்கணநாட்டிலிந்த வடுகர் பௌத்த சமணமதங்களையே பெரிதுந் தழுவினவர்! வடமேற்கே எருமை நாட்டை (மைசூரை) ஆ ண்ட கங்கை அரசர்களும் சமணமதந் தழுவினவர்களே யாவர்.20 ங்ஙனமாக வடக்கும் வடமேற்கு முள்ள வடுகக்

19

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_22.pdf/335&oldid=1587897" இலிருந்து மீள்விக்கப்பட்டது