உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 22.pdf/334

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* மாணிக்கவாசகர் வரலாறும் காலமும்

1

301

யாடல்களும் தொன்றுதொட்டு வந்த வரலாற்று முறையினவாய்க் காணப்படுதலின், அவை தம்மை ஒன்றன்பின் ஒன்றாய் ஒருங்குவைத் தோதினாரென்க. ஆகவே, வரகுண பாண்டியனை எதிர்த்துத் தோல்வியுற்ற சோழமன்னனே, பின்னர்த் தனக்கு வடுகக் கருநாடரைத் துணைகூட்டி வந்து அவன்றன் மகனோடெதிர்த்துத் தோற்றுச் சென்றபிற், சிலகாலங் கழித்து அச் சோழமன்னர் வலியுஞ் சுருங்கிவிட, அவ் வடுகக் கருநாடர் மன்னன் ஒருவன் தானே வலியனாய்ப் போந்து மேலை வரகுணபாண்டியனுக்குப் பேரனாய்க் கருதத்தக்க பாண்டியனை வென்று ஒட்டி அவனது அரசைக் கவர்ந்து கொண்டா னென்பது புலப்படாநிற்கும். இவ்வாறு பழைய நாளிற் பாண்டிநாட்டை வடுகக் கருநாடர் கைப்பற்றிக் கொண்டு அதன்கட் சிறிதுகாலம் அரசு புரிந்தது ஒரே முறைதான் என்பது கல்வெட்டுகளாற் புலப்படுதலானும், நின்றசீர் நெடுமாற நாயனாரென்னும் பாண்டிய அரசர் கி.பி. ஏழாம் நூற்றாண்டின் முற்பாதியில் அரசு புரிந்தவராகலின் அவர்க்குமுன் மதுரையை யாண்ட ‘செழியன் சேந்தன்', மாறவர்மன் அவநி சூளாமணி', கடுங்கோன்' என்னும் பாண்டியர் மூவர்க்குந் தொண்ணூ ணூ றாண்டு

வைப்பக் கடுங்கோனுக்கு முன்னரே பாண்டிநாட்டைக் கைக்கொண்ட களப்பிரரது ஆட்சி ஆறாம் நூற்றாண்டின் முற்பாதியிலோ இன்னும் அதற்கு முன்னரோ செல்லவேண்டு மாதலானும் அவ்வடுகக் கருநாடர் மதுரையைக் கைப்பற்றியது கி.பி. மூன்றாம் நூற்றாண்டிற்கும் ஆறாம் நூற்றாண்டின் முற்பாதிக்கும் இடையிலாதல் வேண்டும். மற்று அக் காலந்தான் யாதோ வெனின், மேலே விரிவாக ஆராய்ந்து காட்டிய முடிபாற் கல்லாடம்' என்னும் நூலின் காலம் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டின் ஈறு அல்லது ஆறாம் நூற்றாண்டின் துவக்கம் என்ப பெறப்பட்ட மையின்,” அந்நூலிற்,

“படைநான்கு உடன்று பஞ்சவற் றுரந்து மதுரை வௌவிய கருநடர் வேந்தன்

அருகர்ச் சார்ந்துநின்று அருட்பணி யடைப்ப’18

என்று குறிக்கப்பட்ட கருநாடர் ஆட்சி ஆறாம் நூற்றாண்டிற்கு முற்பட்டதாதல் தேறப்படும். அற்றாயின், அவரது ஆட்சி ஆறாம் நூற்றாண்டிற்குமுன் எப்போது துவங்கிற்றெனின்; வரகுண

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_22.pdf/334&oldid=1587896" இலிருந்து மீள்விக்கப்பட்டது