உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 22.pdf/333

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

300

  • மறைமலையம் - 22

வேண்டுமென்று சொல்லுதலே வேண்டா. இதற்கு அறிகுறியாக நம்பியார் கூறுவது பெரிதுங் கருத்திற் பதிக்கற் பாற்று. அவர், வரகுண பாண்டியன்றன் மகன்பொருட்டு இறைவன் நிகழ்த்திய அருள் விளையாட்டையும் அதனையடுத்து அப் பாண்டிய இளைஞன் காலத்து நிகழ்ந்த 'உலவாக் கோட்டை வைத்த திருவிளையாடலை'யுங் கூறி முடித்தபின், 'மூர்த்தியார்க்கு அரசளித்த திருவிளையாடலைப் பாடத் துவங்குகின்றுழித் “துன்னு சேனையிற் றுளங்கிய ஒருகரு நாட

மன்னன் அன்நாள் வந்துஅருட் டென்னனை யோட்டிக் கன்னி மண்டலங் கொண்ட அமண் கையர்கை விழுந்து முன்ன நீடிய வைதிக முறையையும் ஒழித்தான்”

த்

என்னும் 2ஆஞ் செய்யுளால் வரகுணபாண்டியன்றன் மகனுக்கும் பின் அரசுக்குவந்த பாண்டியமன்னன் காலத்தில் வடுகக் கருநாடர் மீண்டும் படையெடுத்துவந்து அப்பாண்டி யனை வென்று துரத்தி அவனது அரசைக் கைப்பற்றிக் கொண்டமை தெரித்தார். மூர்த்தியார்க்கு அரசளித்த இத் திருவிளையாடற்கு முன் வரகுண பாண்டியன்றன்மகன் அரசும். அதற்குமுன் வரகுண பாண்டியன் அரசுங் கூறி, அவ் விரண்டு அரசுக்கும் பிற்பட்ட இப்பாண்டிய னரசை வைத்து அவர் தொடர்புபடுத்திக் கூறுதலை ஆழ்ந்து காண்பார்க்கு. இம் மூர்த்தியார் திருவிளையாடலின் முகத்துச் சொல்லப்பட்ட பாண்டியன் வரகுண பாண்டியன் மைந்தர்க்குப் பின் வந்தோனாதல் இனிது விளங்கும்.

வரகுணனுக்குச் சிவலோகங் காட்டின திருவிளையாடல் முதல் மூர்த்தியார்க்கு அரசளித்த திருவிளையாடல் ஈறான நான்கும், வரகுண பாண்டியன் முதலாக அரசர் மூவர் காலத்திலும் நிகழ்ந்தமை தொன்றுதொட்டு வரும் வரலாற்றான் அறிந்தமையா லன்றோ, அந் நான்கினையும் நம்பியார் ஒன்றன்பின் ஒன்றாக அடைவுபடுத்தி வைத்து ஓதினார். இவ்வாறே இவர் நூன்முழுதும் அவ்வப் பாண்டியர் அரசுகளை ஒன்றன்பின் ஒன்றாக அடைவுபட வைத்தோதச் சான்றுகள் காணாமையின், அவை தம்மை ஆண்டாண்டு முன்னது பின்னும் பின்னது முன்னுமாக முன்னுமாக வைத்துரைத் தாராயினும், ஈண்டு வரகுண பாண்டியனது அரசுக்குப்பின் நிகழ்ச்சிகளைக் கூறுதற்கண் மட்டும் இம்மூன்று திருவிளை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_22.pdf/333&oldid=1587894" இலிருந்து மீள்விக்கப்பட்டது