உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 22.pdf/332

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாணிக்கவாசகர் வரலாறும் காலமும்

1✰

299

மண்சுமந்த தன் கைப்பிரம்பால் அடியுமுண்டு மறைந்ததனைத் தானே நேரேயிருந்து கண்டபின், அவ்விறைவன்பால் அன்பு மீதூரப் பெற்றுத், தன் படைகளை வலுப்படுத்தும் முயற்சியுங் கைவிட்டு இறைவனது அருளையே சார்ந்து நின்றானாதல் வேண்டும். அங்ஙனம் அவன் படை வலிவின்றி யிருந்தமை கண்டே அவன் தந்தையை முன்வந்தெதிர்த்த சோழன் இப்போது கருநாடகரைத் துணைகூட்டிக் கொண்டு மீண்டும் அவனைவந்து எதிர்த்தானாதல் வேண்டும். இரண்டாம் முறை இச்சோழன் கருநாடரைத் துணைகூட்டிவந்தா னென்றமை யால், வடுகக் கருநாடர்க்கும் சோழமன்னர்க்கும் அக்காலத்தே உறவுண்டானமையும் அவ் வுறவு முதன் முதல் நாகபட்டினத்துச் சோழனால் உண்டாகிப் பின்னர் அவன் மகன் தொண்டை மான் இளந்திரையன் வழியே பெருகினமையும் ஐயுறவின்றித் தெளியற்பாலனவாம். பழைய சங்கத்தமிழ் இலக்கியங்களாற் புலனான இவ் வுண்மைகளும், பெரும்பற்றப் புலியூர் நம்பியார் இயற்றிய திருவிளையாடற்புராண வுரைப் பொருள்களும் தம்மில் ஒத்துநிற்கக் காண்டலின்; பழைய பழைய நிகழ்ச்சி களைக் கூறுதற்கண் நம்பியார் திருவிளையாடல் பெரும்பாலும் வரலாற்றை முறை வழுவாது நின்று உண்மை உரை கூறுதலும் பிற்காலத்திற் பரஞ்சோதியார் ஆக்கிய திருவிளையாடல் பழைய செய்திகளை நன்காராயாது தனக்குத் தோன்றிய வாறெல்லாம் பொய்யும் புளுகும் விரவப் புனைந்து கட்டிச் சொல்லுதலும் பாகு படுத்துணர்தல் வேண்டும். வரலாற்று முறையிற் பிழைபடாது செல்லும் நம்பியார் திருவிளை யாடலுரை பழையகால நிகழ்ச்சிகளின் உண்மை யுணர்தற்கு ஓர் இன்றியமையாத கருவியாதலுங் கடைப் பிடித்துணர்தல் வேண்டும். அது கிடக்க.

இனி, வரகுண பாண்டியனைப்போல், அவன் மகனும் றைவன் அருளுதவி கொண்டே தன்மேலும் எதிர்த்து வந்த சோழனையும் அவனுக்குத் துணைவந்த கருநாடரையும் வென்றனன் என்பதனால் இப்பாண்டியர் இருவர் காலத்தும் அவர்தம் படைவலி மிகக் குறைந்துபோனமை ஐயமின்றித் தெளியப்படும். இங்ஙனம் இவர் காலத்திலேயே பாண்டியரது படையாற்றல் சிறுகிவிட்டமையின், இவ்விருவர்க்கும் பின்வந்த பாண்டியன் காலத்தில் அது பின்னுஞ் சிறுத்துப்போயிருக்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_22.pdf/332&oldid=1587891" இலிருந்து மீள்விக்கப்பட்டது