உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 22.pdf/331

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

298

மறைமலையம் 22

வெம்பெரும் படையினோடும் வினைசெய்வான் அடைந்தான் நாளும்

உம்பர்சூழ் மதுரை மூதூர்

ஓசனை யென்ன ஆங்கு.

9916

என்று கூறுதலால் இனிதறியப்படும். வரகுணபாண்டியன் மேற் படையெடுத்துவந்த சோழனே மீண்டும் அவன் மைந்தன்மேற் படையெடுத்து வந்தனன் என்பதற்கு, அங்ஙனம் வந்த சோழன் தன் படையிலுள்ள கரி பரி காலாள் எல்லாம் இளைத்துப்போன பாண்டியன் படையிலிருந்து ஒருவன் ஏவிய வாளியால் துணிக்கப் பட்டுக் கணக்கின்றி வீழ்தலைக் கண்டு,

“துப்பமர் மெய்யன் ஒப்பிலா அறஞ்சேர் சொக்கநா யகன் பெருஞ் செய்தி

செப்பிடிற் பத்த ரள வினிற் காம

தேனுவென் றியாவரும் அறைவர்

மெய்ப்பட இவனும் அவனை முன் னிட்டே வென்றனன் மற்றியார் வெல்வார் தப்பிலை இவன்றன் தந்தையன் தனக்கும்

உதவினன் தாரணி வியப்ப

99

என்று று இவற்கும் இவன் றந்தை வரகுணற்கும் இறைவன் உதவி புரிந்ததனை எடுத்துக்காட்டினமையாற் றுணியப்படும். தம்மேல் எதிர்த்துவந்த

சோழமன்னன் ஒருவன் காலத்திலேயே வரகுணனும் அவன்றன் மகனும் அரசாண்டமை மேற்காட்டிய வாற்றால் நன்கு புலனாதலின், சிவபிரான் திருவடிக்கண் மெய்யன் புடையனாகிய வரகுணன் நீண்டகாலம் அரசு புரிந்திலன் என்பதும் இது கொண்டு தெற்றெனத் துணியப்படும். துணியப் படவே, வரகுணனிடத்தன்றி, அவன்றன் மகன் அரசுக்குவந்த பின்னரே திருவாதவூரடிகள் அவ்விளை ஞனிடத்து அமைச் சராய் அமர்ந்தாராகல் வேண்டும் என்பதூஉம் உய்த்துணரப் படும்.

முற்பகுதியி லெல்லாம் அடிகளின் அருமைபெருமையும் பேரன்பும் உணராது அவரை மிகவுந் துன்புறுத்திய அவ்விளம் பாண்டியன், இறைவனே ஒரு கொற்றாளாய் வந்து பிட்டுக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_22.pdf/331&oldid=1587890" இலிருந்து மீள்விக்கப்பட்டது