உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 22.pdf/330

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் - 1

18

297

கோவலனைக் கொல்வித்த பிறகு பாண்டியர் அரசின் வலி வரவரக் குறைந்துபோயிற் றென்பதற்கு, வெற்றிவேற் செழியன் காலத்திற் ‘பாண்டியனாடு மழைவறங் கூர்ந்து வெப்பு நோயுங் குருவுந்தொடர’ வருந்திற்றென ஆசிரியர் இளங்கோ வடிகள் அருளிச் செய்தமையும் வரகுண் பாண்டியன் றன்னை எதிர்த்து மேல்வந்த சோழனொடு போர்புரிதற்கு அஞ்சி இறைவன் றுணையை வேண்டினானென நம்பியார் கூறினமை யுமே உறுஞ் சான்றாம். அதுவேயுமன்றி, வாதவூரடிகள் பாண்டிய மன்னன் பால் அமைச்சராய் வந்தமர்ந்த காலத்து, அவனிடத்துள்ள குதிரைப் படைகளெல்லாம் பெரும்பாலும் அழிந்துபட்ட தனானே மீண்டும் அவற்றை வலிபெறுத்தும் பொருட்டுக் குதிரைகொள்ள அடிகள் பாற் பெரும்பொருள் நல்கி அப் பாண்டியமன்னன் அவரை விடுத்தனன் என்பதனால், அடிகள் அமைச்சராய் இருந்துழிப் பாண்டியன் படைவலி

சுருங்கி யிருந்தமை நன்கறியப்படும் அடிகள் தாம்

எடுத்துச்சென்ற பொருளுக்குக் குதிரைகள் வாங்கி வராமல், அப் பொருட்டி ரளை யெல்லாம் சிவனடியார்க்கும் அற்றார்க்கும் அலந்தார்க்கும் நல்கிச் செலவு செய்துவிட்ட மையாலும், அடிகள் பொருட்டு இறைவன் நரிகளைப் பரிகளாக்கிக் கொணர்ந்து விட்டுப்போக, அப்பரிகள் முன்னை நரிகளாய் உருமாறி எஞ்சிநின்ற பழைய குதிரைகளையுங் கிழித்துக் கொன்றுவிட்டு ஓடிப்போயினமையாலும் வரகுணன் மைந்தன் பின்னும் படைவலி சுருங்கி இ இறைவன்றன் றிருவருளையே துணையாக நாடிநிற்க வேண்டியவனானான். இவ்வாறு வரகுணபாண்டியன் மைந்தன் தனது படைவலி சுருங்கியிருத்தல் கண்டு, முன்னர் இவன் தந்தைக்குத் தோற்று ஓடிப்போன சோழன் இப்போது தனக்குக் கருநாடரைத் துணையாகக் கூட்டிக்கொண்டு மீண்டும் மதுரைமேற் படையெடுத்து வந்தனனென்பது நம்பியார்.

"நம்புற வாழ்வோன் றன்மேல்

நவையிலா அறிவான் மிக்க

செம்பியன் ஒருவன் பேசித்

தெறுங்கு படையினோடும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_22.pdf/330&oldid=1587889" இலிருந்து மீள்விக்கப்பட்டது